கால்பந்து மைதானத்தில் நுழைந்து வீரரின் கழுத்தில் கைப்போட்டு செல்ஃபி! ரசிகரின் அத்துமீறலால் அதிர்ச்சி!

Lionel Messi - 2026

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் கழுத்தை பிடித்து ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுத்த சம்பவம் மைதானத்தையே அதிர வைத்திருக்கிறது. சமூக வலை தளங்களில் இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் கொண்டாடப்படும் கால்பந்து உலகக்கோப்பை மத்திய கிழக்கு நாடான கத்தாரில் நடைபெற இருக்கிறது. அதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற தகுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் ஈக்வடார் நாடுகள் களம் கண்டன. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் மேட்ச் டிரா ஆனது. இருப்பினும் முந்தைய ஆட்டங்களில் அர்ஜென்டினா 11 வெற்றிகளை பெற்று இருந்ததன் காரணமாக உலக கோப்பை போட்டிகளுக்கு அந்த அணி தகுதி பெற்றுள்ளது.

அர்ஜென்டினா – ஈக்வடார் போட்டி முடிவடைந்ததும் உலக கோப்பைக்கு தகுதி பெற்றதை அடுத்து அர்ஜென்டினா வீரர்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர். அப்போது தடுப்புகளை மீறி மைதானத்திற்குள் ஓடி வந்த ஒரு நபர் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் கழுத்தை பிடித்து செல்பி எடுத்துக்கொண்டார்.

இது சக வீரர்கள் மற்றும் மைதானத்தில் இருந்த ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

மைதானத்திற்குள் ஓடிவந்து வலுக்கட்டாயமாக செல்ஃபி எடுக்க முயற்சித்த அந்த ரசிகரிடம் ‘ஸ்டாப்..ஸ்டாப்’ என மெஸ்ஸி கோபத்துடன் கூறியுள்ளார். ஆனாலும் அந்த ரசிகர் விட்டபாடில்லை.

இறுதியில் அவரை தள்ளி விட்டு அங்கிருந்து எரிச்சலுடன் நகர்ந்தார் மெஸ்ஸி. அதன்பின்னர் மைதானத்தின் பாதுகாப்பு பணியாளர்கள் அந்த ரசிகரை உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேற்றினர்.

மேலும் அந்த ரசிகர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக மைதான நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

இன்னிலையில் தான் எடுத்த செல்பி வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அந்த ரசிகர். ‘எல்லா காலத்திலும் சிறந்த வீரர்’ என குறிப்பிட்டு அந்த வீடியோவை அவர் ஷேர் செய்துள்ளார்.

மேலும், ‘உங்கள் அழகான கால்பந்தின் மூலம் பல ஆண்டுகளாக நீங்கள் எனக்கு வழங்கிய அனைத்து மகிழ்ச்சியான தருணங்களும் நன்றி’ என்றும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து லியோனல் மெஸ்ஸியின் கழுத்தை பிடித்து ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுத்த விவகாரம் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Entertainment News

Popular Categories