இராமேஸ்வரத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு வைரக் கற்கள், கஞ்சா ஆயில் கடத்த முயன்ற யூசுப் சுலைமான், செபீக் கைது!

Cannabis oil - 2026

ராமநாதபுரம் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள், தங்கம், வைரம் ஆகியவை கடத்தப்படுவது தடுத்து நிறுத்த எடுத்த நடவடிக்கையில் வைரகற்களும், கஞ்சா ஆய்விலும் பறிமுதல்.

ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி கார்த்திக் தலைமையிலான தனிப்படை போலீஸார் ராமநாதபுரம் முழுவதும் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி பசும்பொன் நகர் ரயில்வே கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபரை தடுத்து நிறுத்த முயன்றபோது, அவர் நிற்காமல் சென்றுள்ளார்.

அவரை போலீஸார் விரட்டிச் சென்று பிடித்து அவர் வைத்திருந்த பாலிதீன் கவரைப் பிரித்து சோதனை செய்தனர். அதில் பட்டை தீட்டப்படாத வைரக் கற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் கீழக்கரையைச் சேர்ந்த யூசுப் சுலைமான் என்பதும், ராமேஸ்வரத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு வைரக் கற்கள் கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் 2 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Yusuf Solomon - 2026

இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் இந்த வைர கற்களை கீழக்கரையைச் சேர்ந்த ஒருவர் கொடுத்து அனுப்பியதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் வைர வியாபாரிகளுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் பழைய பேருந்து நிலையம் அருகே நடத்திய வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடிக்க முயன்றபோது ஒருவர் வாகனத்தில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

அதனைத் தொடர்ந்து மற்றொரு நபரை பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா ஆயில் இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் கேரளா மாநிலம் நெடுமங்கலம் பண்ணவயல்வீடு பகுதியைச் சேர்ந்த செபீக் என்பதும்,

Sepik - 2026

இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா ஆயிலைக் கொண்டு வந்ததும் தெரியவந்தது. தப்பி ஓடிய திருவனந்தபுரத்தைச் சேர்ந்த முகம்மது ஜாவீத் ரகுமானை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் எஸ்.பி. கார்த்திக்கிடம் கேட்டபோது, “டிஜிபி அறிவுறுத்தலின் பெயரில் ராமநாதபுரம் முழுவதும் கடத்தல் சம்பவங்களை தடுக்க வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டிருக்கின்றன.

அதன்படி நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டாம் ரக வைர கற்களும், மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக `ஆஷிஷ்’ எனப்படும் கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயுலும் கடத்திச் செல்ல முயன்றதை தடுத்து பறிமுதல் செய்துள்ளோம்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இருவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories