Kangaroo - 2026

தாய் கூட இருக்க எவ்வளவு போராட்டம்..? குட்டியின் தவிப்பு!

சற்றுமுன் அடடே... அப்படியா? பொது தகவல்கள்
Kangaroo - 2026

பிறந்த கங்காரு குட்டிகள் 2 கிராம் எடையுடன் இருக்கிறது, இவை 6 மாதங்கள் அதன் தாயின் வயிற்றுக்குள் இருந்து வளர்கிறது. கங்காருகள் அதன் வயிற்று பைக்குள் உள்ள குட்டி வெளியே விழுந்துவிட்டால் அது திரும்ப அதனை எடுத்து உள்ளே வைத்துக்கொள்ளாது என்றும் சில தகவல்கள் தெரிவிக்கிறது.

தற்போது அதேபோல தான் தாயின் வயிற்று பையை விட்டு வெளியேறிய கங்காரு குட்டி மீண்டும் அந்த பைக்குள் செல்ல போராடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவானது ட்விட்டரில் நேச்சர் லைஃப் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில் தாய் கங்காரு ஒன்றும் அதனருகே குட்டி கங்காரு ஒன்றும் இருப்பதை காணலாம்.

அந்த குட்டி கங்காருவானது தவறுதலாக தாயின் வயிற்று பையை விட்டு இறங்கிவிட்டது போலும், அதனால் அது மீண்டும் தனது தாயின் வயிற்று பைக்குள் செல்ல போராடிக்கொண்டு இருக்கிறது. மெதுவாக தவழ்ந்து வயிற்று பைக்குள் செல்கிறது.

ஆனால் அதனால் முழுவதுமாக உள்ளே செல்லமுடியவில்லை, கீழே விழுந்துவிடுகிறது. இதேபோல பலமுறை முயற்சி செய்து இறுதியாக தாயின் வயிற்று பைக்குள் கங்காரு குட்டி உட்கார்ந்து விடுகிறது.

‘முயன்றால் எதையும் சாதிக்கமுடியும்’ என்பதை இந்த கங்காரு குட்டி நிகழ்த்தியுள்ளது. இந்த வீடியோவுடன் அமேஸிங் நேச்சர் லைஃப் என்கிற கேப்ஷனும் சேர்த்து பதிவிடப்பட்டு இருக்கிறது.

இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை அறுபத்தி எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். நெட்டிசன்கள் பலரும் கங்காரு குட்டியின் செயலுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.