Gorilla tortoise - 2026

கொரில்லாவின் அன்பில் ஆமை உண்ட ஆப்பிள்!

சற்றுமுன் அடடே... அப்படியா? பொது தகவல்கள்
Gorilla tortoise - 2026

ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.

வீடியோவில் அருகருகே அமர்ந்திருக்கும் இரண்டு மனித குரங்களுடன் ஒரு ஆமையும் இருக்கிறது. அந்த குரங்குகள் தங்கள் கையில் இருக்கும் ஆப்பிள் பழத்தை சாப்பிடும்போது, அருகில் இருக்கும் ஆமைக்கும் ஊட்டி விடுகின்றன.

ஆமையும் அழகாக ஆப்பிளை மெதுவாக கடித்து உண்ணுகிறது. ஆமை சாப்பிட்டபிறகு குரங்கு அந்த ஆப்பிளை சாப்பிடுகிறது.

விலங்குகளின் இந்த நட்பை பார்க்கும்போது, மெய்சிலிர்க்க வைக்கிறது. டிவிட்டரில் மட்டும் இந்த வீடியோ 5 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.

இந்த வீடியோவுக்கு கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன்கள், குரங்கு மற்றும் ஆமையின் நட்பு மனிதர்களுக்கே எடுத்துக்காட்டாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

டெக்னாலஜி காலத்தில் உறவுகளுக்கான முக்கியத்துவதும் குறைந்து இருக்கும் இந்த காலத்தில், உறவின் அருமையை இந்த வீடியோ கண்முன்னே உணர்த்துவதாகவும் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.