images 77 - 2026

சிறுமிகளை குறிவைக்கும் வாலிபர்கள்..

சற்றுமுன்

திருநெல்வேலி அருகே பிளஸ் ஒன் மாணவிக்கு குழந்தை பிறப்பு எதிரொலி போக்சோவில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது பிளஸ் 1 மாணவிக்கு குழந்தை பிறந்தது.

இவ்வழக்கில் பணகுடி இசக்கியப்பன் (26) ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.இம்மாணவி வயிற்று வலியால் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது கர்ப்பமுற்று பிரசவ வலி ஏற்பட்டிருப்பது தெரிந்தது. பின் அவருக்கு குழந்தை பிறந்தது.இதுதொடர்பாக நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர்.மாணவியின் ஊரில் நடந்த கோயில் கொடை விழாவிற்கு ஒளி ஒலி பெருக்கி அமைக்க வந்த இசக்கியப்பன் அவரிடம் தவறாக பழகியதால் கர்ப்பமுற்றது தெரிந்தது. இசக்கியப்பனை ‘போக்சோ’ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

images 77 - 2026

இதுபோல்அடையாறு காவல் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு உடல்நலம் பாதித்ததால், பெற்றோர் மருத்துவமனை அழைத்துச் சென்றனர். பரிசோதனையில், சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.கிண்டி மகளிர் போலீசார் விசாரித்தனர்.

இதில், பெருங்குடியைச் சேர்ந்த நந்தகுமார்( 39) என்ற தனியார் நிறுவன ஊழியர், சிறுமியை கட்டாயப்படுத்தி, நான்கு மாதமாக பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது.இதையடுத்து, நேற்று நந்தகுமாரை, ‘போக்சோ’ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.