வரதட்சணையின் நன்மை.. செவிலியர் பாடப்புத்தக பகுதியால் சர்ச்சை!

dowry 2 - 2026

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீட்டுக்குள் நடக்கும் இந்த வகையான வன்முறை சம்பவங்களால் ஆண்டுதோறும் 20,000க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

இந்த, குடும்ப வன்முறைக்கு வரதட்சணை கொடுமை மூலக் காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், செவிலியர் மாணவர்களுக்கான சமூகவியல் புத்தகத்தில் வரதட்சணையை நியாயப்படுத்தும் விதமாக சில கருத்துக்கள் பதிவு இடம்பெற்றுள்ளன . டி. க இந்திராணி இந்த புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.

வரதட்சணை நன்மைகள் என்ற தலைப்பின் கீழ்:

குடும்பங்களை கட்டமைப்பதில் வரதட்சனை முக்கிய பங்கு வகிக்கிறது. பெற்றோர்கள் கல்யாணத்திற்காக மற்றொருவருக்கு தொலைக்காட்சி, குளிர்சாதன பெட்டி, மின் விசிறி, துணிகள் மற்றும் வாகனங்கள் வழங்குகிறார்.

வரதட்சணை மூலம் பெற்றோரின் சொத்தில் இருந்து சம பங்கினை மகள்கள் பெற முடிகிறது.

வரதட்சணை மூலம் பெண்கள் கல்வி அதிகரிக்கிறது. நன்கு படித்து, உத்தியோகம் செல்லும் பெண்கள் அதிக வரதட்சணை கொடுக்க வேண்டிய தேவை குறைகிறது.

dowry 1 - 2026

இதனால், அநேக பெற்றோர்கள் தங்கள் மகள்களை படிக்க வைக்க முன்வந்துள்ளனர். எனவே, பெண் கல்வியை வரதட்சணை மறைமுகமாக ஊக்குவிக்கிறது.

அசிங்கமான தோற்றம் கொண்ட பெண்கள் கூட அதிக வரதட்சணை கொடுத்து அழகான ஒருவரை கல்யாணம் செய்து கொள்ளலாம்.

வரதட்சணை தொடர்பான இந்த பதிவு சமூக ஊடங்களில் பேசும் பொருளானது
மோசமான கருத்தை விதைக்கும் இத்தகையை கருத்தை பாடங்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கத் தொடங்கின.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்:

தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தகவல் படி, வரதட்சணை தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 2018ம் ஆண்டில் 12,826 வழக்குகளும், 2019ம் ஆண்டில் 13,307 வழக்குகளும், 2020ம் ஆண்டில் 10,366 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2020ல் ஒட்டுமொத்த தற்கொலை எண்ணிகையில் குடும்ப வன்முறை காரணமாக 33% பேர் தற்கொலை செய்துள்ளனர்.

dowry - 2026

2016,17,18 ஆகிய மூன்று ஆண்டுகளில் வரதட்சணை மரணங்கள் தொடர்பாக முறையே 7167, 7141 மற்றும் 6966 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் வரதட்சனை வாங்கினாலோ, கொடுத்தாலோ, கொடுக்கத் தூண்டினாலோ அவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனையும், 5000 ருபாய் அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories