சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100யை தாண்டியது.‌

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை இன்று 14வது முறையாக அதிகரிக்கப்பட்டதன் காரணமாக சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100யை தாண்டியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் மாற்றி அமைத்து வருகிறது. இதில், 5 மாநில தேர்தல் முடிந்தபின் கடந்த 22ம் தேதியில் இருந்து தொடர்ந்து விலையேற்றத்தை மேற்கொண்டு வருகின்றனர். இடையில் 2 நாட்கள் மட்டும் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. நாடு முழுவதும் இன்று 14வது முறையாக பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகளுக்கும் அதிகரித்தது.

சென்னையில் நேற்று பெட்ரோல் ரூ.110.09க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 76 காசு அதிகரித்து ரூ.110.85க்கு விற்கப்படுகிறது. டீசல் ரூ.100.18ல் இருந்து 76 காசுகள் உயர்ந்து ரூ.100.94 ஆக விற்பனையாகிறது. கடந்த 16 நாட்களில் 14வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. கடந்த 16 நாட்களில் பெட்ரோல் ரூ.9.56க்கும் டீசல் ரூ.9.86க்கு ம் விற்பனையாகிறது. இவ்விலையேற்றத்தால், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இருப்பினும் மத்திய அரசு கண்டுகொள்ளாமல், தொடர் விலையேற்றத்தை மேற்கொண்டு வருகிறது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகளை விட இந்தியாவில் 5 சதவீதம் அளவிற்கே பெட்ரோல் விலை அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியிருப்பதாவது,

மற்ற நாடுகளில் உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை விட இந்தியாவில் 10ல் ஒரு பங்கு விலை தான் உயர்ந்துள்ளதாக கூறினார்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில் ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 15 நாட்களில் 13வது முறையாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் பார்லி.,யில் அமளியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக லோக்சபாவில் பதிலளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி கூறியதாவது: மற்ற நாடுகளில் உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை விட இந்தியாவில் உயர்த்தப்பட்ட விலை 10ல் ஒரு பங்கு தான். கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் 2022 மார்ச் இடையிலா பெட்ரோல் விலைகளை ஒப்பிடுகையில், அமெரிக்காவில் 51 சதவீதம், கனடாவில் 52 சதவீதம், ஜெர்மனியில் 55 சதவீதம், பிரிட்டனில் 55 சதவீதம், பிரான்சில் 50 சதவீதம், ஸ்பெயினில் 58 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால், இந்தியாவில் 5 சதவீதம் அளவிற்கே அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

images 2022 04 06T121006.033 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories