முல்லைப் பெரியாறு மேற்பார்வை குழுவுக்கு மேலும் 2  உறுப்பினர்கள்-உச்சநீதிமன்றம் உத்தரவு..

முல்லைப் பெரியாறு மேற்பார்வை குழுவுக்கு மேலும் 2  உறுப்பினர்களை உச்சநீதிமன்றம் இன்று நியமித்தது. கண்காணிப்பு மேற்பார்வை குழுவின் உத்தரவை கடைபிடிக்காமல் இருக்கும் பட்சத்தில் மாநில தலைமை செயலரே பொறுப்பு என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.முல்லைப் பெரியாறு மேற்பார்வை குழுவுக்கு
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து தலா ஒரு தொழில்நுட்ப நிபுணர்களை நீதிமன்றம் நியமித்தது.

கேரள மாநிலத்தில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளது. ஆனால் அணையின் பராமரிப்பு தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதனால் பல ஆண்டுகால பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு, தற்போது வரை நடைபெற்று வருகிறது. அதில் ஒரு வழக்கான முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான ரிட் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான ரிட் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த விசாரணைக்கு கேரளா அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முல்லைப் பெரியாறு அணையில் நீரைத் தேக்கிவைக்கும் அளவை அதிகரிக்க ஒன்றிய அரசு அமைத்த நிபுணர் குழு அளித்த பரிந்துரை விவாதமாக்கினார்.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

அப்போது பேசிய அவர், முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை. முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தேக்கி வைக்கப்படும் நீரின் அளவைப் பொறுத்து உள்ளது. இதனால் தமிழகம், கேரளத்தை சேர்ந்த தொழில்நுட்பம் சார்ந்த உறுப்பினர்களை கொண்டு முல்லைப் பெரியாறு அணையின் கண்காணிப்பு குழுவை மாற்றியமைக்க வேண்டும்.

மேலும் இந்த விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண புதிய அணை கட்டுவதே கேரள அரசின் நிலைப்பாடாக உள்ளது. ஆனால் புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என அவர் கருத்து தெரிவித்து இருந்தார். அதனையடுத்து வாதங்கள் நிறைவுபெற்ற உடன் தீர்ப்பு வழங்காமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில், அணை பாதுகாப்பு ரிட் மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று அளிக்கப்படும் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, முல்லைப் பெரியாறு மேற்பார்வை குழுவுக்கு மேலும் 2 உறுப்பினர்களை நீதிபதிகள் நியமித்தனர். முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான இயக்கம் மிகவும் முக்கியம். மேற்பார்வை குழுவின் உத்தரவுகள், பரிந்துரையை இரு மாநிலமும் கடைபிடிக்க வேண்டும். மேற்பார்வை குழுவுக்கு முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

கண்காணிப்பு மேற்பார்வை குழுவின் உத்தரவை கடைபிடிக்காமல் இருக்கும் பட்சத்தில் மாநில தலைமை செயலரே பொறுப்பு என தெரிவித்த நீதிபதிகள், அணை பாதுகாப்பு ஆணையம் செயல்பாட்டுக்கு வரும் வரை மேற்பார்வை குழுவுக்கு அணையில் அனைத்து அதிகாரம் உள்ளது என கூறினார். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மேற்பார்வை குழுவே அனைத்தையும் கவனிக்கும். ஒன்றிய நீர்வள ஆணையத்தின் சார்பில் ஒரு தொழில்நுட்ப வல்லுநரும் இருப்பார் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

- 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories