health tips - 2026

அப்பாச்சி தீர்வு: குளிர்சுரம், பூச்சிக்கடி, விஷபேதி, முகப்பரு, வாத நோய், மேக நோய் களைப்பு, சொறி சிரங்கு, அசதி, வயிற்று வலி, இருமல், மார்புவலி, கண் நோய்..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

விஷ பேதி சரியாக…

தாமரைப்பூவையும் தாமரைக் கொடியையும் உலர்த்தி பொடியாக்கி ஆறு முதல் பத்து அரிசி அளவு நீரில் கலந்து ஒரு மணிக்கு ஒரு முறை பருகி வர பேதி, விஷ பேதி குணமாகும்.

வெந்தயக் கீரையின் மகத்துவம்

வெந்தயக் கீரையில் மீன் எண்ணெயில் உள்ள சத்துக்கள் அனைத்தும் உள்ளது. வாத நோய், மேக நோய் களைப்பு, சொறி சிரங்கு. அளவுக்கு மீறிய அசதி, வயிற்று வலி, இருமல். மார்புவலி, கண் நோய் ஆகிய அனைத்திற்கும் இக்கீரை மிகவும் நல்லது. இதில் காரம். உப்பு.புளி சேர்த்தால் அதிலுள்ள சத்துக்கள் அழிந்து விடும்.

பூச்சிக் கடித்து விட்டதா?

பொதுவாக பூச்சிக் கடிக்கு கடிவாயில் சுண்ணாம்பு தடவலாம். அடுத்தபடி உப்பை வெந்நீரில் கரைத்து ஒரு துணியில் நனைத்து பூச்சி கடித்த இடத்தில் ஒற்றி எடுக்க வீக்கம் குறையும்.

விஷப்பூச்சி கடித்த இடத்தில் எருக்கம் பால் தடவலாம். இது தவிர
அம்மான் பச்சரிசியில் ஒரு பிடி வாயில் போட்டு மென்று விழுங்க வேண்டும். வீக்கம் இருந்தால் வற்றி விடும்.

குப்பை மேனி இலைச் சாற்றுடன் சுண்ணாம்பு கலந்து கடிவாயில் தடவ தடிப்பு நீங்கும். கடுப்புக் குறையும். பூச்சிக் கடிகளால் தொந்தரவுகள் இருக்கலாமே தவிர பெரிய ஆபத்து எதுவும் இல்லை.

பூரான் கடித்தால் சில மணி நேரம் கடுக்கும். தடிப்பு உண்டாகும். இதற்கு சுண்ணாம்பு தடவ குணமாகும்.

அட்டை. கம்பளிப் பூச்சி கடித்தால் அந்த இடம் சிவந்து விடும்.

முருங்கை இலையை அரைத்துப் பற்றுப் போட்டால் பலன் இருக்கும்.

தடிப்பு மீது நல்லெண்ணெயில் விட்டுத் தேய்க்கலாம்.

அரணை கடித்து விட்டாலோ, தப்பித் தவறி சோற்றுப் பானையில் விழுந்து விட்ட சோற்றை சாப்பிட நேர்ந்தாலோ வாந்தி மயக்கம் உண்டாகும். நாக்குத் தடித்து விடும். பேச்சுக் குழறும். கிராமங்களில் சாரணை செடியின் வேரை அரைத்து உள்ளுக்குக் கொடுத்து கடிவாயில் பற்றும் போடுவார்கள்.

முகப்பரு வராமலிருக்க…

தினமும் காலையில் முகத்தில் சிறிது தேங்காய் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து பயற்றமாவு கொண்டு முகம் கழுவி வர முகம் பளபளக்கும். முகப்பருக்களும் தோன்றாது.

குளிர் ஜூரமா?

நொச்சி இவைகளை நீரில் போட்டுக் காய்ச்சி வேதுபிடிக்க உடலிலுள்ள நீர் வெளியேறி சுரம் குறையும். உடல் வலிகளும் நீங்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.