2022அமர்நாத் யாத்திரை முன்பதிவு ஏப்ரல் 11ல் துவக்கம்:

Published:

2022 ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு
ஏப்ரல் 11 ஆம் தேதி துவங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்த யாத்திரை மீண்டும் இந்த ஆண்டு துவங்கி யுள்ளது பக்தர் களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் கோடையில் ஜூன்-ஆகஸ்ட் மாதங்களில் தெற்கு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமர்நாத் குகைப் பகுதியில் தனித்துவமான வடிவத்தில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நடந்து வருகின்றனர். 

கொரோனா நோய்த்தொற்று காரணமாக 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்கு சில நாள்களுக்கு முன்பும், 2020 மற்றும் 2021 இல் முழுமையாக யாத்திரை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில்
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்ததால் 2022 ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை முன்பதிவு ஏப்ரல் 11 ஆம் தேதி துவங்குகிறது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

இது குறித்து ஸ்ரீ அமர்நாத் ஆலய வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிதிஷ்வர் குமார் கூறியதாவது,

ஜூன் 30 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி முடிவடையும் அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு ஏப்ரல் 11 ஆம் தேதி துவங்குகிறது. பக்தர்கள் ஏப்ரல் 11ஆம் தேதி ஆலய வாரியத்தின் இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம். ஜம்மு காஷ்மீர் வங்கி, பஞ்சாப் நேஷல் வங்கி, யெஸ்வங்கி மற்றும் நாடு முழுவதும் உள்ள எஸ்பிஐ வங்கியின் 100 கிளைகள் என 446 கிளைகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த ஆண்டு சராசரியாக மூன்று லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக, ரம்பனில் 3000 பக்தர்கள் தங்கும் வகையில் யாத்ரி நிவாஸ் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த ஆண்டு பக்தர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. என்று கூறியுள்ளார்.

images 17 1 - 2026
ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

Related articles

Recent articles

spot_img