rbi - 2026

லிமிட் ரூ.5000 மட்டுமே..! RBI அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா வணிகம்
rbi - 2026

இந்தியாவில், நிதி நெருக்கடியால் தொடர்ந்து இயங்க முடியாமல் தவிக்கும் வங்கிகளை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் எடுத்து பல்வேறு தடைகளை விதிக்கிறது.

அந்த வகையில், நிதி ரீதியாக மிகவும் நெருக்கடியான சூழலில் உள்ள பெங்களூருவைச் சேர்ந்த சுஸ்ருதி சௌகர்த பேங்க் நியமிதா வங்கிக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதன்மூலம், அந்த வங்கியில் பணம் செலுத்தியுள்ள வாடிக்கையாளர்கள் இனி 5000 ரூபாய் வரை மட்டுமே எடுக்க முடியும். இந்த அறிவிப்பால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்த வங்கி மீதான தடை நீடிக்கும். வங்கி விதிமுறைச் சட்டம் 1949-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இனி, ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு நிதி தொடர்பான வேலையிலும் இந்த வங்கி ஈடுபட முடியாது. இந்த வங்கியின் நிதி நிலைமை மேம்படும் வரை இதுபோன்ற தடைகள் நீடிக்கும்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் இல்லாமல் இந்த வங்கி இனி யாருக்கும் கடன் கொடுக்க முடியாது. முதலீடுகளை ஈர்க்கவும், முதலீடு செய்யவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.