பாட்டுப்பாடி ட்ராஃபிகை என்ஜாய் செய்த சச்சின்!

Sachin Tendulkar - 2026

கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் தனது நீண்ட நேர பயணத்தை எப்படி என்ஜாய் செய்தார் என்பதை காட்டும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தற்போது ஐந்து முறை கோப்பையை வென்ற ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் மென்ட்டாராக உள்ளார்.

இதனிடையே மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி ஏப்ரல் 6 அன்று நடைபெற்றது.

இந்த போட்டிக்காக மும்பை அணியின் விக்கெட்கீப்பிங் கோச் கிரண் மோருடன், சச்சின் புனே நோக்கி காரில் சென்றார். அப்போது சச்சின் மற்றும் கிரண் மோர் சென்ற கார் ட்ராஃபிக்கில் சிக்கியது.

பொதுவாக ட்ராஃபிக் ஜாமில் மாட்டி கொண்டால் எல்லோரும் டென்ஷனாவது தானே வழக்கம். ஆனால் சச்சினும், கிரண் மோரும் சேர்ந்து காருக்குள் உட்கார்ந்தபடியே அந்த ட்ராஃபிக் ஜாமை என்ஜாய் செய்தனர்.

இது தொடரான வீடியோவை சச்சின் தனது ட்விட்டரில் ஷேர் செய்து உள்ளார். ட்விட்டரில் ஹேமந்த் குமாரின் பிரபலமான மராத்தி பாடலை ட்ராஃபிக்கில் சிக்கிய போது பாடும் வீடியோவை மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் ஷேர் செய்து உள்ளார்.

புகழ்பெற்ற மராத்தி பாடலான ‘மி டோல்கரா தர்யாச்சா ராஜா’ (Mi Dolkara Daryacha Raja) என்ற பாடலை காருக்குள் ஒலிக்கவிட்டு மகிழ்ச்சியுடன் பாடி கொண்டே லேசான உடலசைவால் நடனமாடினார்.

இந்த வீடியோவை தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ள சச்சின், புனே செல்லும் போது ட்ராஃபிக்கில் சிக்கி கொண்டோம். அப்போது இந்த அருமையான பாடலைக் கேட்க நினைத்தேன்” என்று கேப்ஷன் கொடுத்து உள்ளார்.

மேலும் அந்த ட்விட்டில் பாடலின் சில வரிகளை மராத்தியில் சச்சின் எழுதியுள்ளார். சச்சின் ஷேர் செய்துள்ள இந்த ஜாலி வீடியோவை இதுவரை 2.62 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்து உள்ளனர்.

16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்து உள்ளனர். பாடலின் வரிகளுக்கு ஏற்றவாறு சச்சின் சைகைகளை பயன்படுத்தி டான்ஸ் ஆடுவதை பல ரசிகர்கள் வெகுவாக ரசித்து கமெண்ட்ஸ் செய்து உள்ளனர்.

சச்சினின் இந்த வீடியோவை பார்த்த பலர் தங்களது குழந்தை பருவ நினைவுகளை மீண்டும் அசைபோட வைத்து விட்டதாக குறிப்பிட்டனர். தாங்களும் சிறுவயதில் இந்த பாடலை ஜாலியாக பாடி, டான்ஸ் ஆடியதை பல யூஸர்கள் நினைவு கூர்ந்து கமெண்ட்ஸில் பதிவு செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories