சபரிமலையில் சித்திரை விஷூ கனி தரிசனம்..

உலகளவில் பிரபலமான சபரிமலை ஐயப்பன் கோயில் சித்திரை விஷூ கனி தரிசனம் நிகழ்ச்சி இன்று அதிகாலை துவங்கி நடைபெற்றது.கனிதரிசனம் கண்ட பக்தர்களுக்கு ‌கை நீட்டம் பிரசாதம் வழங்கப்பட்டது.

கேரளாவில் மலையாள மாதமான மேஷம் மாதம் நேற்று பிறந்தது.

மேஷம் மாதத்தின் முதல் நாளில் தான் சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பஞ்சாங்கப்படி இன்று சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி நடந்தது.இந்த நாளில் கோவில்களில் காய், கனிகள் குவித்து வைக்கப்பட்டிருக்கும். கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இன்று காய். கனி பிரசாதமாக வழங்கப்படும். இதுபோல பெரியவர்கள். சிறியவர்களுக்கு கைநீட்டம் எனப்படும் பணமும் வழங்குவர்.

சித்திரை விஷூ நாளில் சபரிமலை ஐயப்பன் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதற்காக கோவில் நடை கடந்த 10-ந் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.இன்று அதிகாலை கோவிலில் சித்திரை விஷூ கனி தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 7 மணி வரை கனிகாணும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு கோவில் தந்திரிகளும், மேல்சாந்திகளும் கை நீட்டம் காணிக்கை பிரசாதம் வழங்கினர்.

கேரளாவில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால் பக்தர்கள் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. நேற்று இரவு முதலே பம்பை முதல் சன்னிதானம் வரை இருமுடி கட்டி வந்த பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இன்று காலையில் அவர்கள் சரணகோ‌ஷம் முழங்க 18-ம் படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தனர். கனிகாணும் நிகழ்ச்சி முடிந்த பின்னரே அவர்கள் வெளியே வந்தனர்.சித்திரை விஷூ பண்டிகைக்காக 10-ந் தேதி திறக்கப்பட்ட கோவில் நடை வருகிற 18-ந் தேதிஅடைக்கப்படுகிறது.அதன்பின்பு மே மாத பூஜைகளுக்காக மே 14-ந்தேதி திறக்கப்படுகிறது. வழக்கமான மாத பூஜைகள் முடிந்த பின்னர் மே மாதம் 19-ந் தேதி நடை அடைக்கப்படுகிறது.

images 41 2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories