perarasu - 2026

தமிழ் தமிழ் என்று கத்தல் மட்டும் எதற்கு..? பேரரசு அதிரடி கேள்வி!

சற்றுமுன் அடடே... அப்படியா? அரசியல் தமிழகம்
perarasu - 2026

போலி தமிழ் ஆர்வலர்களுக்கு இயக்குனர் பேரரசு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “நாம் நல்லவனாக வாழ்வது வேறு, நல்லவனாக நடிப்பது வேறு.

அதேபோல் தமிழ் பற்றோடு இருப்பது வேறு, தமிழ்ப்பற்று இருப்பது போல் நடிப்பது வேறு”. இங்கு பலர் தமிழ்ப்பற்று இருப்பது போல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் அழியாமல் காக்க வேண்டும் என்றால், முதலில் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாயமாக்க வேண்டும்.

தமிழ்நாட்டிலுள்ள பல பள்ளிக்கூடங்களில் தமிழ் பாடமே இல்லை என்பது இன்றைய அவல நிலை. பசுமரத்து ஆணி என்று சொல்வார்கள் அது ஆரம்பப்பள்ளி காலமே.

இன்று பல ஆரம்ப பள்ளிகளில் தமிழ் பாடம் இல்லை என்கின்ற போது பின்னர் எப்படி எந்த வயதிலும் பதியும். படிப்பறிவு இல்லாத காலத்தில் எழுதப்படிக்க தெரியாதவர்கள் கோடி பேர் இருந்தனர். இன்றைய நிலையும் அப்படித்தான்.

தமிழில் எழுதப்படிக்க தெரியாத கோடிக்கணக்கான மாணவர்கள் உள்ளனர் என்னும் அபாயத்தை நாம் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்தியை விரும்பினால் படி. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழன் தமிழைப் படிக்க வேண்டும். முதலில் அழியாதது தமிழை காப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.