இடி மின்னலுடன் தமிழகத்தில் பல பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வெப்ப சலனம் காரணமாகவும், வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
மேலும், தென் தமிழகம், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 20ம் தேதி முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





