அதிகரிக்கும் கொரோனா: ஆட்சியர்களுக்கு சுகாதாரதுறை செயலர் கடிதம்!

Radhakrishnan 1 - 2026

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் உயிர் பிழைப்பதே அதிசயம் என்ற நிலையில் இருந்து தற்போது ஓரளவு மீண்டு வந்துள்ளனர்.

கட்ந்த 3 மாதங்களாக குறைந்து வந்த கோரானா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்த தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், தில்லியில் ஏப்ரல் 4 ஆம் தேதி ஒரு நாளைக்கு 82 வழக்குகள் இருந்த நிலையில், நேற்று கோவிட் பாதிப்புகள் 632 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 1 சதவீதத்திற்குக் கீழே இருந்து கொரோனா பாசிட்டிவ் விகிதம் சுமார் 5 சதவீதத்திற்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உ.பி., ஹரியானா மற்றும் மஹாராஷ்டிராவிலும் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து காணப்படுவதாகவும் கூறியுள்ளார். . ஏப்ரல் 18-ம் தேதியில் சர்வதேச அளவிலும் OMICRON பாதிப்பு ஒரு நாளைக்கு 7.45 லட்சம் என்ற அளவில் இருந்து வருவதாக கூறியுள்ளார்.

தமிழகத்தில் மாறுபட்ட பாதிப்பு இல்லையென்று தெரிவித்தவர் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளதாக கூறியுள்ளார்.

ஒரு நாளைக்கு 25க்குக் கீழே இருந்த கொரோனா பாதிப்பு தற்பு 30க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பதிவாகியுள்ளதாகவும் , 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் கொரோனா பாதிப்பு தொடர்புகளை கண்காணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டவர், பரிசோதனைகளையும் அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் முக்கவசத்தை தமிழகத்தில் திரும்ப பெறப்படவில்லையென தெரிவித்தவர் எனவே முக்கவசத்தை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் மருத்துவமனையில் தேவையான மருந்து மற்றும் உபகரணங்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மற்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது கவலை அளிப்பதாக இருந்தாலும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்போரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இருந்த போதும் கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories