சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாரா வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நகை பிரியர்கள் வேதனைப்படும் வகையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஆம் சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்து காணப்படுகிறது.
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 22 கேரட்4,969 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 39,752 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி 73.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 73,300 ரூபாய்க்கு விற்பனையாகிறது.





