போலீஸ் என்கவுண்டருக்கு பயந்தே ரவுடி பினுசரண் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி பினு, போலீசார் வருவதற்கு முன்பே அங்கிருந்து சென்றுவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். ஆனாலும் அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார்.
ரவுடி பினுவை சுட்டுப் பிடிக்க போலீசார் தீவிரமாக இருந்தனார். இந்த தகவல் ரவுடி பினுவுக்கும் கிடைத்தது. இதையடுத்து, இன்று காலை அம்பத்தூர் துணை கமிஷனர் அலுவலகம் வந்த ரவுடி பினு, துணை கமிஷனரிடம் சரண் அடைந்தார்.
ரவுடி பினு கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பம் கவுரவமான குடும்பம். அவரது முதல் மனைவி இறந்துபோனார். தற்போது 2-வதாக ஒரு பெண்ணை காதலித்து பினு திருமணம் செய்துள்ளார். கராத்தே வீரரான பினு முக்கிய அரசியல் கட்சி தலைவர் ஒருவரின் ஆதரவோடு ரவுடியாக மாறிவிட்டதாக கூறப்பட்டது.
தற்போது போலீசிடம் சரணடைந்துள்ள பினுவிடம், இதுவரை அவர் செய்த கொலைகள், அவருக்கு ஆதரவாக இருக்கும் பிரமுகர்கள் குறித்தும் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.



