கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை மேற்கொண்டனர். கோடநாடு வழக்கில் சுமார் 15 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் உதவியாளராக பூங்குன்றனை முதல்முறையாக தனிப்படை போலீசார் விசரணைக்கு அழைத்துள்ளனர். கோவை காவலர் பயிற்சி பள்ளியில் பூங்குன்றனிடம் விசாரணையானது நடைபெற்றது.
கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மறுவிசாரணை தொடங்கி தற்போது, துரிதமாக நடைபெற்று வருகிறது. தினமும் முக்கிய சாட்சிகளை தனிப்படை போலீசார் நேரில் அழைத்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இன்றையதினம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராகயிருந்த பூங்குன்றனிடம் இன்றைய தினம் முதன்முறையாக விசாரணை செய்தனர்.
கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து காலை 9.30 மணி முதல் விசரணையானது தொடங்கியது. பூங்குன்றன் ஜெயலலிதாவின் நீண்ட கால நேர்முக உதவியாளராக பணியாற்றியவர் அதுமட்டுமின்றி ஜெயலலிதா குறித்த அனைத்து தகவல்களும் தெரிந்தவர் என்ற அடிப்படையிலியே அவரை தனிப்படை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
இந்த வழக்கை பொறுத்தவரை இதுவரை சசிகலா, விவேக் ஜெயராமன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி, சஜ்ஜீவன் உள்ளிட்ட சுமார் 200-க்கும் மேற்பட்டவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பதிவு செய்துவருகின்றனர். இந்த விசரணையின் அடிப்படையிலே தற்போது ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் போலீசார் விசரனை மேற்கொண்டனர்.





