கொரிய திருமணத்தில் சேலை அணிந்து வந்த மணப்பெண்!

koriyan - 2026

ஒரு மணமகனோ அல்லது மணமகளோ அல்லது அவர்களது குடும்பத்தினரோ, திருமணத்தின் போது எடுக்கட்ட வீடியோக்களை எப்பொழுது பார்த்தாலும் சரி, அது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாய் – அதே சமயம் மிகவும் வேடிக்கையானதாகவும் – இருக்கும்

ஆனால், அப்படியான ‘வெட்டிங் வீடியோ’க்களில் ஆயிரத்தில் ஒரு வீடியோ மட்டுமே “செம்ம” வைரல் ஆகும்;

இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ அனைத்து விதமான யூசர்களுக்கு மத்தியிலும் வைரலாக பரவி வருகிறது. எக்கச்சக்கமான வியூஸ், லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வரும் அந்த வீடியோ, இன்ஸ்டாகிராமில் வைரல் ஆனதை தொடந்து, மற்ற சமூக ஊடங்கங்களின் வழியாகவும் பரவி, தற்போது இணையத்தில் அதிகம் ரசிக்கப்படும் வீடியோக்களில் ஒன்றாக உருமாறி உள்ளது.

அது கொரியாவை சேர்ந்த ஒரு மணமகனும், இந்தியாவை சேர்ந்த ஒரு மணமகளும் திருமணம் செய்துகொண்ட வீடியோவே ஆகும்.

இந்திய-கொரிய ஜோடியின் திருமணத்தில், மணப்பெண் மிகவும் அழகாக, புடவை அணிந்து தன் திருமணத்தில் பங்கேற்றார். இந்த வீடியோவில் நாம் காணக்கூடிய மணமகனின் பெயர் ஜோங்கு மற்றும் மணமகளின் பெயர் நேஹா ஆகும். இவ்விருவரும் தற்போது தென் கொரியாவின் தலைநகரான சியோலில் வசிக்கின்றனர்.

இந்த ஜோடியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 1.4 லட்சத்திற்கும் மேலானோர் ஃபாலோ செய்கின்றனர். அதன் வழியாக பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோவில், மணப்பெண் நேஹா சேலையிலும் மற்றும் மணமகன் ஜோங்கு சூட் அணிந்து கொண்டும் எப்படி தங்கள் திருமண விழாவிற்குள் நுழைகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

“எனது கொரிய திருமணத்தில் நான் சேலை அணிந்தேன்” என்கிற ‘டெக்ஸ்ட்’ உடன் ஷேர் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவின் முழு பதிப்பும் குறிப்பிட்ட ஜோடியின் யூட்யூப் சேனலிலும் பகிரப்பட்டுள்ளது.

நேஹாவின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிக்கவும், சேலை அணியும் இந்திய கலாச்சாரத்தின் வேர்களை கொரியாவில் ஊன்றியதற்காகவும், பலரும் தத்தம் கருத்துக்களை கமெண்ட்களாக பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

இந்த வீடியோ மூன்று நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டது. கொரியாவில் – ஒரு வெளிநாட்டு மண்ணில் – ஒரு பெண் எப்படி தனது பாரம்பரியங்களை மதிக்கிறார் மற்றும் செயல்படுத்துகிறார் என்கிற பூரிப்பின் கீழ் எக்கச்சக்கமான பாராட்டுகளை பெற்று, தற்போது இந்த வீடியோ 9.7 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளது.

இன்ஸ்டாகிராம் யூசர் ஒருவர், “நீங்கள் இருவரும் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்” என்று கமெண்ட் செய்ய, இன்னொருவர் “நீங்கள் என் இதயத்தைப் பாடச் செய்கிறீர்கள்” என்று கமெண்ட் செய்து உள்ளார். பலரும் “நீங்கள் சேலையில் அழகாக இருக்கிறீர்கள்” என்றும் கமெண்ட் செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories