வைரலான மதுரை அஜித் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டி!

Published:

ajith8 - 2026

நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளையட்டி உழைப்பாளர் சிலையில் உள்ள உழைப்பாளர்களின் உருவங்களாக அஜித்தின் படங்களை வைத்து மதுரை முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி அசத்தியுள்ளனர் அவரது ரசிகர்கள்.

தற்போது இந்த சுவரொட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் அஜித்தின் பிறந்த நாள் மே 1ஆம் தேதி‌ உழைப்பாளர் தினமான அன்று அஜித் பிறந்த நாளும் வருவதால், சென்னை மெரினாவில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலையில் உள்ள அனைத்து உருவங்களையும் அஜித் குமாராக வடிவமைத்து மதுரை முழுவதும் அவரது ரசிகர்கள் சுவரொட்டியாக ஒட்டி அசத்தியுள்ளனர்.

ajith - 2026

மேலாடையின்றி வேட்டியோடு நரைத்த தலையுடன் உழைப்பாளர் சிலையிலுள்ள அனைத்து உருவங்களையும் அஜித் குமாராக சித்தரித்து சுவரொட்டியை வடிவமைத்துள்ளது காண்போரை பெரிதும் ஈர்த்துள்ளது.

‘பில்லா ஸ்டார் அஜித் ரசிகர்கள் – மதுரை’ என சுவரொட்டியில் குறிப்பிட்டுள்ளனர். ‘உழைப்பாளர்களின் சின்ன மே’ என அதே சுவரொட்டியில் அஜித்தைப் புகழ்ந்துள்ளனர்.

சமூக வலை தளங்களில் பரவி வரும் இந்த படத்திற்குக் கீழே பல்வேறு கருத்துக்களையும் பகிர்ந்துள்ளனர்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Related articles

Recent articles

spot_img