தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை துவங்கும் முன்பே வெயில் வறுத்து எடுத்லநிலையில் தற்போது ஏப்ரல் மாதத்திலேயே கோடை வெயில் உக்கிரமடைந்துள்ள நிலையில் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம் தேதி துவங்குகிறது. இந்த உச்சபட்ச வெப்ப நாட்கள் 28ம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது உள்ள நிலையை விட வெயில் மேலும் உச்சமடையும் .
கடந்த வாரம் முதல் கோடை வெயில் அதிக உக்கிரம் காட்டத் துவங்கியுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி வேலூர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 110 முதல் 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இந்த வெயில் இன்னும் நீடிக்கும் என்பது போல நாளை முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் துவங்க உள்ளது. இந்த உச்ச பட்ச வெப்பக்காலம் 28ம் தேதி வரை நீடிப்பதாக ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர்.தற்போது வேலூர்,காஞ்சிபுரம் மட்டுமில்லாமல் விருதுநகர் தென்காசி மாவட்டத்தில் கூட வெயில் நூறு டிகிரி க்கு வாட்டி எடுத்து வருகிறது. இனி அக்னிநட்சத்திர காலத்தில் கூடுதலாக வாட்டி எடுக்கும் .
