திட்டக்குடியில் செந்தில் பாலாஜிக்கு குட்டு வைத்த ஹெச்.ராஜா..!

Published:

h raja in karur meeting - 2026

தமிழகத்தில் அணில்கள் அதிகம் வேலை செய்கின்றன. OPS, EPS ஆட்சிக் காலத்தில் தேவைப்படாத UPS தற்போது அதிக அளவில் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று, திட்டக்குடியில் பாஜக.,வின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா பேசினார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் தனியார் திருமண மண்டபத்தை திறந்து வைக்க பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச் ராஜா வருகை தந்தார். அப்போது அவருக்கு கேரள செண்டை மேளம் முழங்க, சேரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

திருமண மண்டபத்தை திறந்து திறந்துவைத்தார் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசும்போது திமுக ஆட்சியில் தமிழகமே இருளில் மூழ்கிக்கிடக்கிறது. அதிகமா அணில் வேலை பார்க்கிறதா எனத்தெரியவில்லை. அதிமுக ஆட்சியில் ஓபிஎஸ், ஈபிஎஸ் காலத்தில் தேவைப்படாத யூபிஎஸ் தற்போது அதிகமாகத் தேவைப்படுகிறது. செயற்கையாக மின்தட்டுப்பாடை உருவாக்கி திமுக அரசு ஊழல் செய்யப் பார்க்கிறது..

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுப்போய்விட்டது. சாத்தான்குளம் சம்பவத்திற்கு ட்வீட் போட்ட கனிமொழி, திருவண்ணாமலையில் கஸ்டோடியல் டெத் குறித்து பேசாமல் மவுனமாக இருப்பது ஏன்? எனப் பேசினார்

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img