crime scene - 2026

ஆன்லைன் பந்தயத்தில் பணம் இழந்ததால்… செயின் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்!

சற்றுமுன் கிரைம் நியூஸ் கோவை
crime scene - 2026

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவ மாணவிகளை காவல்துறையினர் கைது செய்து விசாரணை

ஆடு மேய்க்கச் சென்ற மூதாட்டியிடம் 5 1/1 பவுன் தங்க செயின் பரிப்பு சம்பவத்தில் பெண் உட்பட இருவரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் இன்று கலிக்க நாய்க்கன்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபரின் வாகனத்தை சோதனை செய்யும்போது உள்ளே தங்க கட்டி இருந்தது தெரியவந்துள்ளது

உடனடியாக விசாரணை செய்தபோது கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தொண்டாமுத்தூர் பகுதியில் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது

விசாரணையில் சோமயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் வயது 20 பிரபல கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருவது தெரியவந்தது உடன் அவருடைய பெண் நண்பர் சுங்கம் பைபாஸ் பகுதியைச் சேர்ந்த தேஜஸ்வினி வயது 20 என்பது தெரியவந்துள்ளது விசாரணையில் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க பல்வேறு நண்பர்களிடம் பணம் வாங்கியதாகவும் திருப்பி கொடுக்க முடியாததால் பெண் நண்பருடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது

கைதான காதலர்கள் இருவருமே தொழிலதிபர்களின் வாரிசுகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் பிரசாத் தனது வீட்டில் இருந்த 30 சவரன் நகையை திருடி இருப்பதும், நகைகள் திருடு போனது தொடர்பாக காவல் துறை விசாரித்த போது தங்களது மகன் பிரசாத்தான் திருடன் என தெரிந்ததால் அவரது பெற்றோர் புகாரை திரும்பப் பெற்றிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆன்லைன் மூலம் பந்தயத்தில் ஏராளமான பணத்தை பிரசாத் இழந்ததால் நகை பறிப்பில் ஈடுபட்ட முடிவு செய்து , இதற்கு உடந்தையாக காதலியை பயன்படுத்தி நகை பறிப்பில் ஈடுபட்டதும் போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.