கூகுள் குரோம் பிரவுசர் யூஸர்களுக்கு.. CERT எச்சரிக்கை!

Google Chrome - 2026

இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வரும் ‘இந்திய கணினி அவசர உதவிக் குழு (CERT-In)’ கூகுள் குரோம் பிரவுசர் (Google Chrome Browser) யூஸர்களுக்கு மீண்டும் ஒரு பகீர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நோடல் ஏஜென்சி வெளியிட்டுள்ள தகவலின் படி, கணினிகளுக்கான கூகுள் குரோம் உலவியில் சில பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிகிறது.

எனவே கூகுள் குரோம் உலவி யூஸர்கள் உடனடியாக அதனை அப்டேட் செய்யும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனை கூகுள் நிறுவனமும் ஒப்புக்கொண்டுள்ளது.

கூகுள் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “திருத்தப்பட்ட கூகுள் குரோம் உலவியை அப்டேட் செய்யாத யூஸர்களுக்கு பிழை விவரங்கள் மற்றும் இணைப்புகளுக்கான அணுகல் தடை செய்யப்படலாம்.

ஒருவேளை மூன்றாம் தரப்பு லைப்ரேரியில் பக் இருக்கலாம். ஆனால் இன்னும் அது சரி செய்யப்படவில்லை. இருப்பினும் அதனை நாங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வோம்” என தெரிவித்துள்ளது.

மென்பொருளில் ஏற்பட்டிருக்கும் புதிய பிழை கூகுள் குரோம் வெர்ஷன் 101.0.4951.41 மற்றும் அதற்கு முன் வெளியாகி இருந்த அப்டேட்டுகளில் பாதிப்பை ஏற்படுத்துவதாக இந்திய கணினி அவசர உதவிக் குழு தெரிவித்து உள்ளது.

இந்த பிழை காரணமாக ஹேக்கர்கள் ஆர்பிடரி குறியீடுகளை பயன்படுத்தி யூசர்களின் மிக முக்கிய தகவல்களை அபகரிக்க முடியும். ஹேக்கர் பாதுகாப்பு தடைகளை எதிர்கொண்டு, பஃபர் ஓவர்ஃபுளோ செய்ய முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த குறைபாடுகளால் டெஸ்க்டாப் யூஸர்களுக்கு மட்டுமே முதன்மையான அச்சுறுத்தல் இருப்பது தெரியவந்துள்ளது. கூகுள் குரோம் இந்த குறைபாட்டை ஒப்புக் கொண்டு 30 பாதிப்புகளை பட்டியலிட்டுள்ளது. ஏழு குறைபாடுகள் ‘உயர்’ அச்சுறுத்தல்கள் கொண்டவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

CERT-In கூற்றுபடி, இந்த உயர் நிலை பாதிப்புகளை ஹேக்கர்கள் பயன்படுத்திக் கொள்ளக்கூடும் மற்றும் ரிமோட் ஆக்சஸ் முறையில் தன்னிச்சையாக குறியீட்டை இயக்கவும், அதையொட்டி முக்கியமான தகவல்களை அணுகவும் முடியும்.

மேலும் இந்த குறைபாட்டால் ஹேக்கர்கள் பாதுகாப்பு அம்சங்களை தகர்த்து யூஸர்களின் தனிப்பட்ட தகவல்களை திருட முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே தான் கூகுள் குரோம் பிரவுசரை அப்டேட் செய்யும் படி மத்திய அரசு அதன் யூஸர்களை எச்சரித்துள்ளது.

கூகுள் குரோம் பிரவுசரை மேனுவலாக அப்டேட் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்டேப்களை பின் தொடரவும்.

  • கூகுள் குரோமை ஓபன் செய்யவும்.
  • இடைமுகத்தின் மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று-புள்ளி மெனுவைக் கிளிக் செய்யவும்.
  • அந்த மெனுவில் Help செல்லவும். அதில் கூகுள் குரோம் (Google Chrome) என்பதை கிளிக் செய்யயும்.
  • உங்கள் கணினியில் தற்போதைய கூகுள் குரோம் (Google Chrome) பதிப்பு இயங்குவதைக் காணலாம்.
  • பாதுகாப்புக் குறைபாட்டிலிருந்து உங்கள் கணினியைப் பாதுகாக்க அப்டேட் ஆப்ஷனை க்ளிக் செய்து புதுப்பித்து கொள்ளவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories