13-ம் நூற்றாண்டு பாறை கல்வெட்டு கண்டுபிடிப்பு!

Inscription 1 - 2026

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அடுத்த சி.ஆண்டாப்பட்டு கிராமத்தில் ’13-ம் நூற்றாண்டு பாறை கல்வெட்டு’ கண்டெடுக்கப்பட்டதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆய்வு நடுவம் அமைப்பைச் சேர்ந்த தர், பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சி.ஆண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள உயரமான பாறையில் 10 அடி நீளத்தில் கல்வெட்டு உள்ளது.

இதன் எழுத்தமைதியைக் கொண்டு 13-ம் நூற்றாண்டு ஸ்ரீ வல்லப பாண்டியன் காலத்தில் வெட்டப்பட்டது என்றும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிலம் தானம் பற்றியது என கல்வெட்டை ஆய்வு செய்த கல்வெட்டியல் அறிஞர் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

அந்த கல்வெட்டில், திரிபுவன சக்கரவர்த்திகள் கோமாற பன்மரான வல்லப பாண்டியனின் ஆட்சி காலத்தில் தென்பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ள மெய்குன்ற நாடு மற்றும் நரிப்பள்ளி நாடு பகுதியில் உள்ள திருவண்ணாமலை உடைய நாயனாருக்கு, அதாவது அண்ணாமலையாருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட பழந் தேவதானமான ஆண்டார்ப்பட்டு நிலம் நெடு நாட்களாக, புலையர்கள் வழியில் உள்ள நிலத்தை கோயில் பணியாளரான கண்ணாரமுதப்பெருமாளான திருச்சிற்றம்பல நம்பி பொன் மல்லப்பனுக்கு பெருமாளும், மல்லப்பதென்னாயக்கரும், கோயில் தானத்தாரும் மற்றும் அனைத்து வரிகளும் உட்பட காணியாக நிலம் கொடுத்ததை பற்றிய செய்தி வெட்டப்பட்டுள்ளது.

ஆண்டாப்பட்டு என அழைக்கப்படும் கிராமத்தின் பெயர், முற்காலத்தில் ஆண்டார்ப்பட்டு என அழைக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு வெட்டப்பட்ட பாறையின் வலதுபுறம் சூரியன் மற்றும் சந்திரன், மேலும் திரு அண்ணாமலையை குறிக்கும் முக்கோண குறியீடு ஆகியவை இடம் பெற்றுள்ளது. திருவண்ணாமலை கோயில் வழிபாடு மற்றும் வளர்ச்சிக்கு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நிலத்தின் மூலம் தானம் கிடைத்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories