தமிழகத்தில் வரும் மே 8-ல் தமிழகம் முழுவதும் சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 1.50 கோடி பேர் 2-ம் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். இதனால் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து தடுப்பூசி போடும் வகையில், கிராம வாரியாக பட்டியல் தயாரிக்கப்பட்டு பொது சுகாதாரத் துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், தடுப்பூசி போடாதவர்களின் பெயர், மொபைல் எண், தடுப்பூசியின் பெயர், முதல் டோஸ் போட்ட நாள், இரண்டாம் டோஸ் போட வேண்டிய நாள், முதல் டோஸ் போட்டு எத்தனை நாட்கள் ஆகியுள்ளன போன்ற விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வரும் 8-ம் தேதி தமிழகம் முழுவதும் சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.





