December 11, 2025, 1:44 AM
24.4 C
Chennai

சங்கரஜெயந்தி ஸ்பெஷல்: ஸ்ரீகுருவாஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..!

athu sankarar 1 - 2025

ஸ்ரீ குரு அஷ்டகம்

1) ச’ரீரம் ஸுரூபம் ததா வா களத்ரம்
யச’ : சாரு சித்ரம் தனம் மேருதுல்யம் /
மன : சேந்ந லக்னம் குரோரங்க்ரிபத்மே
தத : கிம் தத : கிம் தத : கிம் தத : கிம் //

அழகான சரீரம் பெற்றிருப்பினும், அழகான மனைவியைப் பெற்றிருப்பினும், மிகச் சிறந்த, பல விஷயங்களில் புகழ் பெற்றிருப்பினும், மேருமலையின் அளவு செல்வம் பெற்றிருப்பினும் ஒருவன் மனம் குருவின் தாமரைப் பாதங்களை நாடாதாயின் அவற்றால் என்ன பயன்?

2) களத்ரம் தனம் புத்ரபௌத்ராதி ஸர்வம்
க்ருஹம் பாந்தவா : ஸர்வமேதத்தி ஜாதம் /
மன :சேந்ந லக்னம் குரோரங்க்ரிபத்மே
தத : கிம் தத :கிம் தத :கிம் தத: கிம் //

மனைவியும், செல்வமும், மக்களும் பேரப்பிள்ளைகளும், வீடும் உறவினர்களும் இவையெல்லாம் இருப்பினும் ஒருவன் மனம் குருவின் தாமரைப் பாதங்களை நாடாதாயின் பயன் என்ன?

3)ஷடங்காதி வேதோ முகே சா’ஸ்த்ரவித்யா
கவித்வாதி கத்யம் ஸுபத்யம் கரோதி /
‌ மன : சேந்ந லக்னம் குரோரங்க்ரிபத்மே
தத : கிம் தத :கிம் தத : கிம் தத : கிம் //

வேதங்களும், அவை சார்ந்த ஆறு அங்கங்களும், அறிவியல் அறிவும், எதையும் தெளிவாக விளக்கிச் சொல்லக்கூடிய அறிவும், கவிபாடும் திறமையும்,
உரைநடையிலும் மற்றும் செய்யுள் இயற்றும் ஞானமும் இருப்பினும் ஒருவன் மனம் குருவின் தாமரைப் பாதங்களை நாடாதாயின் பயன் என்ன?

4)விதேசே’ஷு மான்ய : ஸ்வதேசே’ஷு தன்ய :
ஸதாசார வ்ருத்தேஷு மத்தோந சான்ய : /
மன : சேந்ந லக்னம் குரோரங்க்ரிபத்மே
தத : கிம் தத : கிம் தத : கிம் தத : கிம் //

அயல்தேசத்தில் பெருமையுடனும், சொந்த நாட்டில் அதிர்ஷ்டத்துடனும், நல்லொழுக்கத்தில் தன்னைவிட சிறந்தவன் இல்லை என்று இறுமாந்திருப்பினும் ஒருவன் மனம் குருவின் தாமரைப் பாதங்களை நாடாதாயின் பயன் என்ன?

5)க்ஷமாமண்டலே பூப பூபாலவ்ருந்தை :
ஸதா ஸேவிதம் யஸ்ய பாதாரவிந்தம் /
மன : சேந்ந லக்னம் குரோரங்க்ரிபத்மே
தத : கிம் தத : கிம் தத : கிம் தத : கிம் //

பாதங்களை ஆராதிக்க ஸாம்ராஜ்யத்தை ஆளும் பேரரசர்களும், மற்ற அரசர்களும்
சூழ்ந்திருப்பினும், ஒருவன் மனம் குருவின் தாமரைப் பாதங்களை நாடாதாயின் பயன் என்ன?

6)யசோ’ மே கதம் திக்ஷு தானப்ரதாபாஜ்
ஜகத் வஸ்து ஸர்வம் கரே யத்ப்ரஸாதாத் /
மன : சேந்ந லக்னம் குரோரங்க்ரிபத்மே
தத : கிம் தத : கிம் தத : கிம் தத : கிம் //

தன் வீரத்தாலும், ஈகையாலும் நாற்றிசையிலும் புகழ் பெற்று, இவைகளால், இவ்வுலகமே தன் கையில் உள்ளது என்று இறுமாந்திருப்பினும் ஒருவன் மனம் குருவின் தாமரைப் பாதங்களை நாடாதாயின் பயன் என்ன?

7)நபோகே ந யோகே ந வா வாஜிராஜௌ
ந காந்தா முகே நைவ வித்தேஷு சித்தம் /
‌‌. மன : சேந்ந லக்னம் குரோரங்க்ரிபத்மே
தத : கிம் தத : கிம் தத : கிம் தத : கிம் //

சுகத்திலோ, விஷயங்களின் மீதுள்ள சிரத்தையையோ, பல குதிரைகளுக்கு அதிபதியாக இருப்பதிலோ, அன்புக்குரியவர்களைப் பார்ப்பதிலோ, செல்வத்தையோ மனம் உறைவிடமாகக் கொள்ள இயலாது. இவையெல்லாம் பெற்றும் ஒருவன் மனம் குருவின் தாமரைப் பாதங்களை நாடாதாயின் பயன் என்ன?
(குருவின் பாதமே தக்க உறைவிடமாகும்)

8 ) அரண்யே ந வா ஸ்வஸ்ய கேஹே ந கார்யே
ந தேஹே மனோ வர்ததே மேத்வநர்க்யே /
மன : சேந்ந லக்னம் குரோரங்க்ரிபத்மே
தத : கிம் தத : கிம் தத : கிம் தத : கிம் //

கானகத்தில் இருக்கும் பொழுதும், சொந்த வீட்டில் இருக்கும் பொழுதும், கடமைகளை நிறைவேற்ற முயற்சிக்கும் விஷயங்களிலும், உடலினைப் பேணுவதிலும், விலைமதிப்பற்ற விஷயங்களிலும் மனம் ஒன்றுவதில்லை. ஒருவன் மனம் குருவின் தாமரைப் பாதங்களை நாடாதாயின் பயன் என்ன? ஆகையால் குருவின் பாதமே கதியாகக் கொள்ள வேண்டும்.

9)அனர்த்யாணி ரத்நாநி முக்தானி ஸம்யக்
ஸமாலிங்கிதா காமிநீ யாமிநீஷு /
மன : சேந்ந லக்னம் குரோரங்க்ரிபத்மே
தத : கிம் தத : கிம் தத: கிம் தத : கிம் //

விலையுயர்ந்த ரத்தினங்களும் முத்துக்களும், நன்கு அலங்கரிக்கப்பட்ட அழகான அன்பான மணப்பெண்ணும் ஆளுமைக்குள் வரினும், ஒருவன் மனம் குருவின் தாமரைப் பாதங்களை நாடாதாயின் பயன் என்ன? (பயனில்லை)

10)குரோரஷ்டகம் ய : படேத்புண்யதேஹீ
யதிர் பூபதிர் ப்ரஹமசாரீ ச கேஹீ /
லபேத்வாஞ்சிதார்யம் பதம் ப்ரஹ்ம ஸஞ்ஜம்
குரோருக்த வாக்யே மனோ யஸ்ய
லக்னம் //

எவரொருவர் குருவின் மீதுள்ள துதியான இந்த அஷ்டகத்தை குருவின் வார்த்தைகளின் மீது சிரத்தை கொண்டு மனமொன்றிச் சொல்கிறாரோ, அவர் சந்யாஸியோ, கல்வி கற்கும் மாணவனோ,அரசன் அல்லது இல்லற தர்மத்தில் இருப்பவனோ, யாராயிருப்பினும் அவர் விரும்பும் பிரம்மஞானத்தை அடைவார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நீதிபதியுடன் அரசியல் செய்து, திமுக., தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளது!

ஜாதி மத பேதமற்ற ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றவர்கள்,நீதிபதி மீது...

தமிழ் திறனறிதல் தேர்வு 2025ன் 100 சாதனையாளர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!

தமிழ்நாடு அரசு தமிழ் திறனறிதல் தேர்வு 2025ன் 100 சாதனையாளர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!

பஞ்சாங்கம் – டிச.10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

போலி தங்கக் காசுகளை குறைந்த விலைக்கு தருவதாகக் கூறி மோசடி; 4 பேர் கைது!

ராஜபாளையத்தில் தங்க காசுகளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த மூதாட்டி உள்பட நான்கு முதியவர்கள் கைது!

Topics

வந்தே மாதரம் பாடலை இழிவுபடுத்தும் ஆ.ராசா பேச்சுக்கு இந்து முன்னணி கண்டனம்!

வந்தே மாதரம் பாடலை இழிவுபடுத்தும் திமுக எம்.பி. ஆ.ராசாவின் பேச்சுக்கு இந்து...

Front-Row Seats in the Living Room: Reimagining Margazhi for the Rasika at Home!

It is that time of the year again. The Magical Margazhi Music Season has descended upon Chennai, a city whose December air is thick with raga, rhythm, and reverence.

பஞ்சாங்கம் டிச.9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories