தீவிரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு செயல்படுகிறது
என் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சென்னையில் நடந்த விழாவில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கல்லூரியில் மறைந்த லெப்டினென்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ராவின் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், நாட்டையே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சீர்குலைப்பதாக குற்றம்சாட்டினார்.
மாணவர்கள், மனித உரிமை இயக்கங்கள் போல் முகமூடி அணிந்து இயங்கி வருகின்றனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மிகவும் ஆபத்தான இயக்கம். அரசியல் லாபத்துக்காக வன்முறையை தூண்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே என்று கருத்து தெரிவித்தார்.
தீவிரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு செயல்பட்டு வருவதாகவும் ஆளுநர் விமர்சனம் செய்தார்.
அரசியல் லாபத்துக்காக வன்முறையை தூண்டுவதை ஏற்க முடியாது என்று ஆளுநர் ரவி கடுமையான குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார்.





