ட்விட்டரில் இந்த அம்சம்.. என்ன ஆகும்..?

twitter - 2026

ட்விட்டரில் எடிட் பட்டன் வேண்டும் என அதன் யூஸர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால் ட்விட்டரின் அசல் வடிவமைப்பை எப்போதும் மாற்றிக்கொள்ள மாட்டோம் என ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்து அடம்பிடித்து வந்தது.

ஒரு SMS-யை எப்படி அனுப்பிட்டால், அதை மாற்ற முடியாதோ? அதேபோல் தான் ட்வீட்டும் ஒருமுறை போட்டால் போட்டது தான் என யூஸர்களிடம் ட்விட்டர் நிர்வாகம் கறார் காட்டி வந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு முதலே மனதை மாற்றிக்கொண்ட ட்விட்டர் நிறுவனம் எடிட் அம்சத்தை சேர்ப்பது குறித்து ஆராய்ந்து வருகிறது. இதற்கு காரணம் உலகின் நெம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் தான். சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை வாங்கிய அவர், எடிட் பட்டன் வேண்டுமா? என்பது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்கணிப்பு ஒன்றிணை நடத்தினார்.

அதற்கு ஏராளமானோர் வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்தே ட்விட்டரின் தகவல்தொடர்புக் குழு, திடீரென எடிட் பட்டன் குறித்து சில நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டது.

ஆனால் தற்போது எலான் மஸ்க் ட்விட்டரை முழுவதுமாக வாங்கி விட்டதால் நிச்சயமாக எடிட் பட்டன் ஆப்ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, முன்னாள் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி மைக்ரோ-பிளாக்கிங், “ட்விட்டர் ஒருபோதும் எடிட் பட்டனைக் கொண்டு வராது” என்று அறிவித்தார்.

ஆனால் இப்போது ட்விட்டர் புதிய ட்விட்டர் எடிட் பட்டனைக் கொண்டுவருகிறது, இது தவறு என்று அறிவிக்கிறது. உண்மையில் ட்விட்டர் எப்போதும் எடிட் பட்டனில் வேலை செய்து வருகிறது. பெறப்பட்ட தரவுகளின்படி.

நீங்கள் எடிட் பட்டன் மூலம் மாற்றிய ட்வீட்களின் அனைத்து பதிவுகளையும் ட்விட்டர் உங்களுக்குக் கீழே காண்பிக்கும் எனக்கூறப்படுகிறது.

தற்போது ட்விட்டரில் எடிட் அம்சத்தை சேர்க்கும் பட்சத்தில், அந்த ட்வீட் எத்தனை முறை எடிட் செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களும் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது யூஸர்கள் எடிட் செய்ய உள்ள ஒவ்வொரு ட்வீட்டையும் ட்விட்டர் நிர்வாகம் கண்காணிக்க உள்ளது. அதேபோல் ஒரு ட்வீட்டை நீங்கள் எத்தனை முறை எடிட் செய்தீர்கள் என்ற History-ம் காண்பிக்கப்படும்.

இதன் மூலம் பயனர்கள் தவறான எதை வேண்டுமானாலும் பதிவிட்டுவிட்டு, பின்னர் எடிட் செய்து தப்பித்துக் கொள்ளலாம் என என்ண முடியாது.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர் ஜேன் மன்சுங் வோங் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட்டில், எடிட் செயல்பாடு எவ்வாறு மாறாமல் இருக்கும் என்பதை விளக்கியுள்ளார்.

அதாவது முதன் முதலாக பதிவிட்ட அதே ட்வீட் உடன், திருத்தப்பட்ட ட்வீட் பற்றிய வரலாற்றுடன் இருக்கும் படி எடிட் பட்டன் உருவாக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.

ட்வீட் திருத்தப்பட்டது தொடர்பான வரலாறு அனைத்து யூஸர்களும் பார்க்கும் படி அமைக்கப்படுமா? அல்லது அந்தந்த ட்விட்டர் கணக்கின் உரிமையாளர்கள் மட்டுமே பார்க்கும் படி இருக்குமா? என்பது பற்றி இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

இதனிடையே APP’s ஆராய்ச்சியாளரான அலெஸாண்ட்ரோ பலுஸ்ஸி, எடிட் பட்டனைப் போன்ற ஸ்கிரீன் ஷாட்களை ட்வீட் செய்திருந்துள்ளார்.

அந்த ஸ்கிரீன் ஷாட்டில், ஒரு ட்வீட்டிற்கு அடுத்துள்ள மூன்று புள்ளிகளை அழுத்தினால் ஓபன் ஆகும் மெனுவில் “எடிட் ட்வீட்” ஆப்ஷன் இருப்பது போல் காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம் தனது புளூ லேப்பில் எடிட் பட்டன் பற்றி சோதனை நடத்தி வரும் அதே சமயத்தில், யூஸர்களுக்கு எடிட் ஆப்ஷனை கொடுத்தால் என்னென்ன மாதிரியான பாதுகாப்புச் சிக்கல்களைச் சந்திக்கக்கூடும் என்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories