12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் பணியாற்றும் 12 காவல்துறை கண்காணிப்பாளர்கள் டிஐஜிக்களாக தகுதி உயர்த்தப்பட்டுள்ளனர்

12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு.

தமிழகத்தில் பணியாற்றும் 12 காவல்துறை கண்காணிப்பாளர்கள் டிஐஜிக்களாக தகுதி உயர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் 2004-ம் ஆண்டு பேட்ச் அதிகாரிகளான காவல்துறை எஸ்பிக்கள் 12 பேர் டிஐஜிக்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் பெயர் விவரம்…

1.செந்தில் வேலன், 2. அவினாஷ் குமார், 3. ராதிகா, 4. ஜெயகவுரி, 5. அஸ்ரா கார்க், 6.ஏ.ஜி.பாபு, 7.பி.கே.செந்தில்குமாரி, 8.ஏ.டி.துரைகுமார், 9.சி.மகேஷ்வரி, 10. ஆசியம்மாள், 11.லலித லட்சுமி, 12.என்.காமினி.

இதற்கான உத்தரவை உள்துறைச்செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.