gallerye 11132531 3025835 - 2026

நாளை திருச்சூர் பூரம் குடைகளில் வீர சாவர்க்கர் படத்தால் சர்ச்சை..

சற்றுமுன்

கேரளாவில் மிக பிரபலமான விழாவான திருச்சூர் பூரம் நாளை நடைபெற உள்ள நிலையில் பூரம் திருவிழாவின் குடை மாற்றம் என்ற நிகழ்ச்சியில் இடம் பெற்ற குடைகளில் வீர சாவர்க்கர் படம் இடம் பெற்றதால் சர்ச்சை கிளம்பி உள்ளது.

கேரளா மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை பூரம் நாளில் பூரம் திருவிழா, யானைகளின் அணிவகுப்பு, குடைமாற்றம் மற்றும் வாணவேடிக்கையுடன் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டுக்கான பூரம் திருவிழா இன்று துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருச்சூர் பூரம் நாளை மாலை நடக்கிறது.

இதையொட்டி, பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில் மற்றும் திருவம்பாடி கிருஷ்ணர் கோவில் நிர்வாகத்தினர் சார்பில் யானைகளின் ஆடை ஆபரண அலங்காரப் பொருட்களின் கண்காட்சி நேற்று துவங்கியது. இதை ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர். திருச்சூர் பூரம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குடை மாற்றத்திற்காக விதவிதமான அலங்கரிக்கப்பட்ட குடைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அதில், மகாத்மா காந்தி, பகத் சிங், கேரளாவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் உட்பட சுதந்திர இயக்கத் தலைவர்களின் படங்கள் இடம் பெற்றிருந்தன. அந்த வரிசையில் வீர சாவர்க்கரின் படமும் இடம் பெற்றிருந்தது. குடையில் சாவர்க்கர் படம் இருப்பதற்கு அங்குள்ள காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால், கோவில் நிர்வாகம் அக்குடைகளை காட்சிப்படுத்துவதை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ALSO READ:  இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!
gallerye 11132531 3025835 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.