எனடின்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடு..

Published:

வரும் 21ம் தேதி நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் http://tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

எனடின்பிஎஸ்சி
குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிட்டுள்ள நிலையில் கீழ்க்கண்ட முறைப்படி பதிவிறக்கம் செய்யலாம்.

குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் ஓடிஆர் (OTR) கணக்கு வாயிலாக ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

பதிவிறக்கம் செய்ய
இதுகுறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், குரூப் II மற்றும் IIஏ தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR) மூலமாக மட்டும் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

IMG 20220511 163709 676 - 2026
ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img