செவிலியர் தினம்: செங்கோட்டையில் பாஜக., இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

Published:

IMG 20220512 WA0033 - 2026

உலக செவிலியர்கள் தினம்: செங்கோட்டை நகராட்சியில் உள்ள அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரியும் செவிலியர்களுக்கு இனிப்பு வழங்கி பாஜக கொண்டாட்டம்!

ஆண்டுதோறும் மே 12ஆம் தேதியன்று சர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றை மானுட குலம் எதிர்கொள்வதில் செவிலியர்கள் ஆற்றிய மகத்தான பங்களிப்பை நினைவுகூருவதற்கு இந்த நாள் ஒரு சிறந்த வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

இந்தநிலையில், உலக செவிலியர்கள் தினத்தையொட்டி, தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சி வளாகத்தில் உள்ள அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையதில் பணிபுரியும் செவிலியர்களுக்கு நகர பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் செங்கோட்டை. நகராட்சி தலைவர் ராமலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செவிலியர்களுக்கு பொன்னாடை அணிவித்து, இனிப்பு வழங்கி வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் செங்கோட்டை பாஜக நகர தலைவரும், 22வது கவுன்சிலருமான வேம்புராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன் மற்றும் செங்கோட்டை நகர பாரதிய ஜனதா கட்சியின் ஐ.டி விங் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு செவிலியர்களுக்கு வாழ்த்துக்களை கூறினர்.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img