images 83 1 - 2026

தங்கம் விலை சரிவு..

சற்றுமுன்

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்து ரூ.38,112-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  அண்மைக்காலமாக ஆபரணத் தங்கத்தின் விலை எதிர்பாரா வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் – ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது. கடந்த 2 தினங்களாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்த நிலையில் நேற்று நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.38,680-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்றும் தங்கம் விலை சரிவை கண்டிருக்கிறது. சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 22 கேரட் ரூ.59 குறைந்து 4,764 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 38,112 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.20 குறைந்து 63.40 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 63,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!
images 83 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.