202205131624467065 Avinashi Linkeswarar Temple 2nd day procession Thousands SECVPF - 2026

அவினாசிலிங்கேசுவரர் கோவில் சித்திரை தேரோட்டம் நிறைவு..

சற்றுமுன்

அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் 2-ம் நாள் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம்பிடித்து இழுக்க தேர் நிலை வந்தடைந்தது.

அவினாசியில் வரலாற்று சிறப்பு வாய்ந்த பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் சித்திரை தேரோட்டம் இந்த ஆண்டு கடந்த 5-ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர்த்திருவிழா தொடங்கியது.

நேற்று  காலை தேரில் வீற்றிருந்த சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பின்னர் காலை மணியளவில் திருத்தேர்வடம்பிடித்து பக்தர்கள் தேர் இழுத்தனர். முற்பகல் 11.30 மணியளவில் அவினாசிமேற்கு ரதவீதியில் தேர் நிறுத்தப்பட்டது.

இன்று காலை ரதத்தின் மீதிருந்த சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் வடம்பிடித்து தேரை ஆயிரகணக்கான பக்தர்கள் திரண்டு வந்துவடம்பிடித்து உற்சாகமாக தேரை இழுத்தனர்.பிற்பகல் திருத்தேர் நிலை வந்துசேர்ந்தது. அப்போது அதிர்வேட்டு முழங்க அனைத்து பக்தர்களும் கைதட்டி மகிழ்த்தியை வெளிப்படுத்தினர்.

202205131624467065 Avinashi Linkeswarar Temple 2nd day procession Thousands SECVPF - 2026
ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.