கேரளாவில் 60-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வு ஆசிரியர் கைது ..

கேரளாவில் ஆசிரியராக பணியாற்றிய போது 60-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கவுன்சிலரை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ள சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் கே.வி.சசிகுமார்.மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த இவர், முன்னாள் பள்ளி ஆசிரியர் ஆவார். மலப்புரம் நகராட்சியின் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கவுன்சிலராகவும் இருந்தார்.

சசிகுமார் கவுன்சிலராக இருந்தது பற்றியும், ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட தகவலையும் சமீபத்தில் அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதனை பார்த்த சசிகுமாரின் நண்பர்கள் அவருக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சசிகுமாரின் முன்னாள் மாணவர் ஒருவர், அவரை பற்றி அதிர்ச்சி தகவல் ஒன்றை பேஸ்புக்கில் பதிவிட்டார். அதில் சசிகுமார் ஆசிரியராக பணியாற்றிய போது, அவரிடம் படித்த மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாகவும், பலரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதனை பார்த்த பலரும் சசிகுமாரை விமர்சித்து கருத்து பதிவிட்டனர்.

குறிப்பாக மாணவிகள் பலரும் சசிகுமாரால் தாங்களும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவிகள், சசிகுமாரால் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.இது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சசிகுமார் விவகாரம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி கேரள கல்வி துறை மந்திரி சிவன்குட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இது போல கட்சி அளவிலும் சசிகுமார் பற்றி விசாரிக்கப்பட்டது. இதில் அவர் மீதான புகாருக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து சசிகுமார் கட்சியில் இருந்து உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் அவர் மீது போலீசார் வழக்கும் பதிவு செய்தனர்.

தன்னிடம் படித்த மாணவிகள் பலரும் தனக்கு எதிராக புகார் தெரிவித்ததும், அதன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததையும் அறிந்த சசிகுமார் தலைமறைவானார்.

அவரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kv sasi kumar 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories