திருச்செந்தூர் இராஜகோபுரத்தில் இரவில் ஏறிய நபரால் பரபரப்பு!

thiruchandur 1 - 2026

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.

இக்கோயிலில், 137 அடி உயரத்தில் ராஜகோபுரம் உள்ளது. இது 9 நிலைகளை கொண்டது. ராஜகோபுரத்தின் மீது 9 கலசங்கள் உள்ளன.

இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 9 மணியளவில் ராஜகோபுரத்தின் கலசத்தின் அருகே மனிதர் ஒருவர் ஏறி அமர்ந்திருப்பதை, கோபுரத்தை தரிசனம் செய்த பக்தர்கள் சிலர் பார்த்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் திருக்கோயில் பணியாளர்களிடம் கூறினர். இதுகுறித்து உடனடியாக போலீஸாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு மீட்பு படையினர், ரோப் கயிறு மற்றும் தார்பாய்களுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ராஜகோபுரத்தின் உட்பகுதி படிகள் வழியாக தீயணைப்பு துறையினர் ராஜகோபுரத்தின் மேல் பகுதிக்குச் சென்றனர்.

அங்கு, கலசத்தின் அருகே அமர்ந்து இருந்த நபரிடம் நைசாகப் பேசி பத்திரமாக மீட்டு கீழே இறங்கினர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர், சிவகங்கை மாவட்டம் கச்சாத்தநல்லூரைச் சேர்ந்த முத்து என்பது தெரிய வந்தது.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

‘நான் பட்டப்படிப்பை பாதியில நிறுத்திட்டேன். இப்போ சிற்ப வேலைகளுக்குச் போறேன். திருச்செந்தூர் கோயில் ராஜகோபுத்தின் சிற்பங்கள், கலசங்கள் பெயிண்ட் அடிக்காம, பாலீஷ் செய்யாம இருந்துச்சு.

பாலிஷ் செய்வதற்காக கோபுரத்தில் உள்ள சிற்பங்களைப் பிடித்து ஒன்றன் மீது ஒன்றாக ஏறி கோபுரத்தின் மேலே ஏறிப் போனேன்’ எனக் கூறினார்.

அவரது பேச்சினால் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றனர் போலீஸார். பொதுவாக சிற்ப வேலை பார்ப்பவர்களே கோபுரத்தில் பாதுகாப்பிற்காக கயிறு கட்டித்தான் ஏறுவார்கள்.

இந்த நிலையில், கயிறு ஏதும் கட்டாமல், இரவு நேரத்தில் 137 அடி உயரமுள்ள கோபுரத்தில் ஏறியது பக்தர்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

Entertainment News

Popular Categories