ஞானவாபி மசூதியில் சிவலிங்கம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Gnanavapi Mosque - 2026

உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டி அமைந்துள்ளது ஞானவாபி மசூதி.

இந்த மசூதியின் பாகங்கள் இந்து கோவில் முறைப்படி அமைந்துள்ளது. மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கௌரி அம்மன் சிலையை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து பெண்கள் 5 பேர், வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையில், ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

அதன்படி, ஞானவாபி மசூதி வளாகத்தில் மூன்றாவது நாளான நேற்று வீடியோ ஆய்வுப் பணி தொடர்ந்து நடைபெற்றது. நேற்றுமுன்தினம் வரை சுமார் 65 சதவீத ஆய்வு நிறைவடைந்த நிலையில் நேற்று கடைசி கட்ட வீடியோ பதிவு தொடங்கியது.

ஆய்வுப்பணி முடிவடைந்த பின் பேசிய ஆய்வு குழு துணை கமிஷனர் ஒருவர் கூறுகையில், மசூதி வளாகத்தில் வீடியோ ஆய்வு பணிகள் தடையின்றி நடத்தப்பட்டது. கூடிய விரைவில் எங்கள் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க முயற்சிப்போம் என்று தெரிவித்தார்.

Enlightened - 2026

ஆய்வு பணி நிறைவடைந்த நிலையில், மசூதி வளாகத்தில் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியருக்கு வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஞானவாபி வளாகத்தின் மேற்குச் சுவரில், இந்துக் கோயில் இடிப்பின் எச்சங்கள் காணப்படுவதுடன், மிகப்பெரிய சான்றாக இருக்கும் படங்கள் ஆய்வு செய்யப்படும். இதற்காக சனிக்கிழமை கணக்கெடுப்பின்போது முதல் மூன்று அறைகள் திறக்கப்பட்ட நிலையில், நான்காவது பூட்டு நேற்று திறக்கப்பட்டது.

வழக்கறிஞர் விஷ்ணு ஜெயின், ஆஜ் தக்/ கிணற்றுக்குள் ஒரு சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார். அதன் பாதுகாப்புக் கோரி சிவில் நீதிமன்றத்திற்குச் செல்வதாக அவர் கூறினார்.

சிவலிங்கம் 12 அடி 8 அங்குல விட்டம் கொண்டது. இந்து தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் மதன் மோகன் யாதவ், சிவலிங்கம் நந்தியை கொண்டது என்று கூறினார்.

அந்த பகுதிக்குள் யாரும் நுழைய தடை விதித்த நிலையில் அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ ஆய்வு செய்ய தடை விதிக்க கோரிய வழக்கு, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories