images 83 2 - 2026

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.344 அதிகரிப்பு..

சற்றுமுன்

தங்கம் விலை கடந்த வாரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று ஒரேநாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.344 அதிகரித்துள்ளது.

images 83 2 - 2026

கடந்த 9ந்தேதி (திங்கட்கிழமை) ஒரு பவுன் தங்கம் ரூ.38,872க்கு விற்கப்பட்டது. மறுநாள் 10-ந்தேதி அது 38,768 ஆக குறைந்தது. 11-ந்தேதி அது ரூ.38,440 ஆக குறைந்தது. 12-ந்தேதி சற்றே அதிகரித்து ரூ.38,584 ஆக உயர்ந்தது. மறுநாள் 13-ந்தேதி மீண்டும் அதிரடியாக பவுன் ரூ.38,040 ஆக குறைந்தது.

கடந்த சனிக்கிழமை மீண்டும் குறைந்து ரூ.38 ஆயிரத்துக்கு கீழே வந்தது. அன்று ரூ.37,896க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை அதே விலையில் நீடித்தது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.37,824க்கு விற்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வாரத்தில் தங்கம் விலை மீண்டும் உயரத்தொடங்கி ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. இன்று ஒரேநாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.344 அதிகரித்துள்ளது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.38,168க்கு விற்கப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.4,728க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.43 அதிகரித்து ரூ.4,771க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.64.20க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.1.20 அதிகரித்து ரூ.65.40க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.65,400க்கு விற்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.