December 7, 2025, 7:06 PM
26.2 C
Chennai

ரேஷன் கார்டு: இதையெல்லாம் செய்து விட்டீர்களா..?

ration - 2025

ரேஷன் கார்டு பயனாளிகளுக்கான புதிய புதுப்பிப்புகள் அவ்வப்போது வெளிவருகின்றன.

ரேஷன் அட்டை பயனாளிகளுக்கு மற்றொரு சிறந்த வாய்ப்பை அரசு வழங்கியுள்ளது. ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்கும் கடைசி தேதியை அரசு நீட்டித்துள்ளது.

பயனாளிகள் இப்போது ஜூன் 30, 2022 வரை தங்கள் ரேஷன் கார்டுகளை ஆதாருடன் இணைக்க முடியும்.

ரேஷன் அட்டையை ஆதாருடன் இணைப்பது போலவே, மொபைல் எண்ணை ஆதாருடன் இணைப்பதும் இன்றியமையாத ஒன்றாகும்.

உங்கள் மொபைல் எண் மாறியிருந்தால், உடனடியாக ரேஷன் கார்டில் அதை அப்டேட் செய்யவும். இதை செய்யவில்லை என்றால், ரேஷன் பொருட்கள் பெறுவதில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

ரேஷன் கார்டில் ஆதார் அட்டையை ஆன்லைனில் இப்படி இணைக்கவும்

  1. இதற்கு முதலில் uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  2. பின்னர் ‘ஸ்டார்ட் நவ்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  3. அதன் பிறகு உங்கள் முகவரி, மாவட்டம், மாநிலம் ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.
  4. இதற்குப் பிறகு ‘ரேஷன் கார்டு பெனிபிட்’ என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  5. இப்போது இங்கே உங்கள் ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை நிரப்ப வேண்டும்.
  6. இந்த தகவல்களை பூர்த்தி செய்த பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.
  7. இங்கே OTP ஐ நிரப்பிய பிறகு, உங்கள் திரையில் செயல்முறை முடிந்த செய்தியைப் பெறுவீர்கள்.
  8. இந்த செயல்முறை அனைத்தும் முடிந்தவுடன், உங்கள் ஆதார் சரிபார்க்கப்பட்டு, உங்கள் ரேஷன் கார்டுடன் உங்கள் ஆதார் இணைக்கப்படும்.

ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டை-யை இணைக்க, ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் மற்றும் ரேஷன் அட்டைதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களை ரேஷன் கார்டு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இது தவிர, உங்கள் ஆதார் அட்டையின் பயோமெட்ரிக் தரவு சரிபார்ப்பும் ரேஷன் கார்டு மையத்தில் செய்யப்படலாம்.

ரேஷன் கார்டில் மொபைல் எண்ணை புதுப்பிப்பது மிக எளிதாகும். இதை எப்படி செய்வது என இந்த பதிவில் காணலாம்.

வீட்டில் இருந்தபடியே ரேஷன் கார்டில் மொபைல் எண்ணை மிக விரைவாக புதுப்பிக்கலாம். புதிய எண்ணெய் புதுப்பிப்பதற்கான செயல்முறையும் மிக எளிதானதே. அதை பற்றி இங்கே காணலாம்.

ரேஷன் கார்டில் மொபைல் எண்ணைப் புதுப்பிப்பது எப்படி?

  • முதலில் ரேஷன் கார்ட் மாற்றுவதற்கான அரசாங்க இணையதளத்திற்கு செல்லவும்.
  • இதில் மொபைல் எண்ணை மாற்றுவதற்கான பக்கத்தை திறக்கவும்.
  • இதில் தகவல்களை உள்ளிடவும்.
  • இதில் முதல் காலமில் குடும்பத் தலைவரின் ஆதார் எண் / என்எஃப்எஸ் ஐடி-ஐ எழுதவும்.
  • அடுத்த காலமில் ரேஷன் கார்ட் எண்ணை எழுதவும்.
  • மூன்றாவது காலமில் குடும்பத் தலைவரின் பெயரை எழுதவும்.
  • கடைசி காலமில் உங்கள் புதிய மொபைல் எண்ணை உள்ளிட்டு அதை சேவ் செய்யவும்.
  • இப்போது உங்கள் மொபைல் எண் புதுப்பிக்கப்படும்.

‘ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு’ திட்டம்

ஜூன் 1, 2020 முதல் நாட்டின் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ரேஷன் கார்டு பெயர்வுத்திறன் சேவையான ‘ஒன் நேஷன்-ஒன் ரேஷன் கார்டு’ சேவையை அரசாங்கம் தொடங்கியுள்ளது.

அதாவது, ஒரு ரேஷன் கார்ட் கொண்டு பயனர்கள் நாட்டின் எந்த மாநிலத்திலும் ரேஷன் வாங்கலாம்.

இத்திட்டம் ஏற்கனவே ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், கோவா, ஜார்க்கண்ட், திரிபுரா, பீகார், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் டாமன்-டியூ ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories