December 8, 2025, 5:39 AM
22.9 C
Chennai

இந்த நம்பர் கால்களை நம்ப வேண்டாம்.. வாட்ஸ்அப் லாக் அவுட் அபாயம்!

Hacker - 2025

பிறருக்கு பணம் அனுப்பவும், பிறரிடம் இருந்து பணம் பெறவும் நம்மில் பலர் யூபிஐ பேமெண்ட் வசதிகளைப் பயன்படுத்தி வருகிறோம்.

ஏனெனில், பயன்பாட்டிற்கு அது மிகவும் எளிமையாகவும், சௌகரியமானதாகவும் இருக்கிறது. ஒருவருக்கு கொடுக்க வேண்டிய தொகைக்கு சரியான சில்லறை நம் கையில் இல்லையே என்ற கவலை யூபிஐ பேமெண்ட் முறை காரணமாக மறைந்து விட்டது.

மெசேஜ் அனுப்புவதற்கு பிரபலமானதாக அறியப்படும் வாட்ஸ் அப்-பிலும் கூட யூபிஐ பேமெண்ட் வசதி இருக்கிறது. நமது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவதற்கு இந்த வசதி உபயோகமாக இருக்கிறது.

பொதுவாக யூபிஐ பரிவர்த்தனை என்பது மிக எளிமையானது. வெறுமனே ஒரு க்யூ.ஆர். கோடு ஒன்றை ஸ்கேன் செய்து, செலுத்த வேண்டிய தொகையை குறிப்பிட்டு, நீங்கள் அனுப்பி விடலாம். அதே சமயம், வாட்ஸ் அப்-பில் நிதி சார்ந்த மோசடிகள் ஏராளமாக நடப்பதாக புகார் எழுந்துள்ளன.

தில்லியைச் சேர்ந்த வாட்ஸ் அப் பயனாளருக்கு அண்மையில் 8420509782 என்ற எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. இன்டர்நெட் இணைப்பு பிரச்சினைகள் தொடர்பாக நீங்கள் புகார் செய்துள்ளீர்களா என்று அந்த அழைப்பில் பேசியவர் வினவினார்.

இதற்கு அந்த பயனாளர் பதில் அளிக்கையில், “நாங்கள் ஏர்டெல் சேவையை குடும்பத் திட்டத்தின் கீழ் பயன்படுத்தி வருவதால், அதை எங்கள் தந்தை தான் கவனித்துக் கொள்கிறார். எங்கள் அப்பா இப்போது வீட்டில் இல்லை. நீங்கள் பிறகு அழையுங்கள்” என்றார்.

தந்தை வீட்டில் இல்லை என்ற பதிலை பயனாளர் கூறியதும், மறுமுனையில் பேசிய நபர் (மோசடியாளர்) அதை அத்துடன் விட்டுவிடவில்லை. உங்கள் ஃபோனில் இருந்து 4018404975600 என்ற எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்த நம்பருக்கு டயல் செய்தால் ஏர்டெல் சேவை மைய பணியாளர்கள் உங்களை 1 அல்லது 2 நாட்களுக்குள் தொடர்பு கொள்வார்கள் என்றும் அவர் கூறினார். இது மோசடி வலை என்பது தெரியாமல் அந்தப் பயனாளர் இதை டயல் செய்து விட்டார்.

மோசடி நபர் குறிப்பிட்ட எண்ணுக்கு அவர் டயல் செய்ததுமே அடுத்த 10 நிமிடங்களில் அவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வந்தது.

உங்கள் மொபைல் எண் வைத்து புதிய டிவைஸில் வாட்ஸ் அப் பயன்படுத்த வேண்டும் என்றால் பின் நம்பர் குறிப்பிடுங்கள் என்று அந்த செய்தில் கூறப்பட்டிருந்தது.

பயனாளர் அதன்படி செய்து முடித்ததுமே ஃபோன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றின் வாட்ஸ் அப்-பில் இருந்து லாக் அவுட் ஆகிவிட்டார்.

பாதிக்கப்பட்ட பயனாளர் இதுகுறித்து கூறுகையில், “வாட்ஸ் அப் லாக் அவுட் ஆனதும் எனக்கு மிகுந்த குழப்பம் ஏற்பட்டது. 401 என்பது நமது மொபைலுக்கு வரும் கால்களை ஃபார்வார்டு செய்வதற்கானது போல.

அந்த நம்பரை நான் டயல் செய்ததும், அனைத்து இன்கம்மிங் அழைப்புகளும் மோசடியாளரின் கட்டுப்பாட்டிற்கு சென்று விட்டது” என்று கூறினார்.

இதற்கிடையே, மோசடி செய்த நபர், பயனாளரின் வாட்ஸ் அப் மூலமாக அவரது நண்பர்கள் 50க்கும் மேற்பட்டோரிடம் பண உதவி கேட்டு மெசேஜ் அனுப்பி விட்டர்.

சிலர் தெரியாமல் பணத்தையும் பரிவர்த்தனை செய்து விட்டனர். இது தெரிய வந்த பயனாளர் இப்போது சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார்.

வாட்ஸ் அப்-பில் இரண்டு அடுக்கு ஆதண்டிகேஷன் முறையை நாம் பயன்படுத்த வேண்டும்.

401 மற்றும் அதனுடன் இணைந்த 10 இலக்க எண்களை டயல் செய்யக் கூடாது.

முன்பின் தெரியாத ஃபோன் அழைப்புகள் மூலமாக வரும் லிங்க்குகளை கிளிக் செய்யக் கூடாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories