பணம் வேண்டாம் விளக்கேற்றி வழிபடுங்கள்.. நித்தியானந்தா வேண்டுகோள்!

nithi - 2026

எனக்கு யாரும் பணம் அனுப்ப வேண்டாம், உடனடியாக பணம் அனுப்புவதை நிறுத்துங்கள் என நித்யானந்தா தனது சீடர்களுக்கும் பக்தர்களுக்கும் ஒரு அன்பு கட்டளை இட்டுள்ளார்.

இதுகுறித்து நித்தியானந்தா தனது புதிய போஸ்ட்டில் கூறுகையில், பரமசிவனின் ஆசிர்வாதங்கள்! இந்த போஸ்ட் அனைத்து பக்தர்களுக்கும் சீடர்களுக்குமானது! எனது உடல்நிலையை பார்த்துக் கொள்ள பணம் அனுப்புவதை நிறுத்துங்கள்.

எனது உடல்நலம் குறித்து வதந்திகள் பரப்பப்படுகின்றன. அந்த நாள் முதல் உலகெங்கும் உள்ள எனது அறக்கட்டளைகளுக்கு பக்தர்களும் சீடர்களும் பணத்தை அனுப்பி வருகிறீர்கள். இதை தயவுசெய்து உடனடியாக நிறுத்துங்கள்.

இந்த பிரிதலால் நீங்கள் என்னை மீண்டும் பார்க்க முடியுமா இல்லை பார்க்க முடியாதா என்பது எனக்கு தெரியாது. ஆனால் உங்களுடைய தொடர்புகளை ஆன்மீகப் பயிற்சியின் மூலம் தொடர்பை உணர்கிறேன்.

இது சுகமான வலியாகவே உள்ளது. நான் சந்தித்து வருவது சுனாமியோ நிலநடுக்கமோ இல்லை.

உங்கள் மன நிம்மதிக்காக எனக்கு பணம் அனுப்புகிறீர்கள். என்னுள் மிகவும் ஆழ்ந்து பரமசிவன் தங்கிவிட்டார். அவரது ஆற்றலை நான் சமாதி மூலம் பெறுகிறேன்.

எனவே பணம் அனுப்புவதற்கான நேரம் இதுவல்ல. எனக்கு பணம் அனுப்ப பக்தர்கள் தங்கள் சொத்துகளையே விற்கிறார்கள் என நான் கேள்விப்படுகிறேன்.

எனது உடலை பார்த்துக் கொள்வதற்காக உலகெங்கும் உள்ள பக்தர்கள் பணம் அனுப்பாதீர்கள். நான் உயிருடன் நீண்ட காலம் இருக்க வேண்டும் என்றும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் அருணாசலேஸ்வரர் கோயிலில் அருணகிரி யோகோஸ்வராவின் படத்தை வீட்டில் வைத்து விளக்கேற்றி வழிபடுங்கள்.

எனது மீது அன்பு செலுத்த விரும்பினால் பணம் அனுப்பாதீர்கள், அதற்கு பதில் நீங்கள் விளக்கேற்றி வழிபடும் செல்பியை எனக்கு அனுப்பி வையுங்கள்.

நான் கண்களை திறக்கும் போது உங்கள் செல்பிகளை பார்க்கிறேன் என கூறியுள்ள நித்தியானந்தா விளக்கேற்றுவதற்கான ஸ்தோத்திரங்களையும் அனுப்பியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories