முற்கால பாண்டியர் நடுகல் கண்டெடுப்பு!

kalvettu - 2026

திருச்சுழி அருகே 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்கால பாண்டியர் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே இலுப்பையூரில் வரலாற்று துறை பேராசிரியர் விஜயராகவன் மற்றும் வரலாற்றுத் துறை மாணவர்கள் சரத்ராம், ராஜபாண்டி ஆகியோர் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் கி.பி. 9-10-ம் நூற்றாண்டை சேர்ந்த முற்கால பாண்டியர்களின் நடுகல்லினை கண்டறிந்தனர். இந்த கல்வெட்டானது 6 அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட கல்லின் மேல் பகுதியில் 11 வரிகள் கொண்ட வட்டெழுத்து கல்வெட்டாக காணப்படுகிறது.

இக்கல்வெட்டின் வரிகளை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளர் சாந்தலிங்கம் உதவியோடு படிக்கப்பெற்றது.

அதில் இக்கல் வெட்டில் இடது பாதி முற்றிலும் சிதைந்தும், வலது பாதியில் மட்டும் எழுத்துக்கள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டானது 2 ஊர்களுக்கிடையே ஏற்பட்ட பூசலில் புல்லன்சாத்தன் என்னும் வீரர் ஒரு ஊரை வென்று உயிர் நீத்தார் என்பதை கூறுகிறது.

kalvettu 1 - 2026

இதுவரையில் பாண்டியநாட்டில் கி.பி. 10-ம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்து நடுகற்கள் 2 மட்டுமே கிடைத்துள்ளன. அதில் ஒன்று தற்போது கண்டறியப்பட்டுள்ள இலுப்பையூர் கல் வெட்டாகும்.

மற்றொன்று இதே ஊருக்கு தெற்கில் 5 கிலோமீட்டர் தொலைவில் ராமநாதபுரம் மாவட்டம் நீராவிக்கு அருகிலுள்ள கரிசல்குளம் என்ற கிராமத்தில் உள்ள நடுகல் ஆகும்.

இது ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. பசுக் கூட்டங்களை கவர்ந்து சென்றபோது எதிர்த்து போரிட்டு உயிர் நீத்த வீரனுக்கு நடப்பட்ட நடுகல் தான் இது.

விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரையில் ராஜபாளையம் அருகே முதுகுடியில் பிற்கால பாண்டியரின் நடுகல்லானது கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது இம்மாவட்டத்தில் களப்பணியின் வாயிலாக முற்கால பாண்டியரின் நடுகல் கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories