
சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்து நாடு தழுவிய அளவில் மத்திய, மாநில அரசு பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன.
மற்றொரு பக்கம், போக்குவரத்து விதிகளை மீறுவோரை தண்டிக்கும் வகையில் கடுமையான அபராதங்களை விதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், எவ்வளவு தான் அபராதம் விதித்தாலும் விதிகளை மீறுபவர்கள் எப்போதும் போல தங்கள் அத்துமீறல்களை தொடர்ந்தபடி இருக்கின்றனர்.
இதனால் காவல் துறையினர் அவ்வபோது புதுமையான முறையில் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்வது உண்டு.
உத்தரப் பிரதேச மாநில காவல் துறையினர் அண்மையில் சமூக வலைதளத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளனர்.
அதில், சாலையை கடக்க முயலும் மான் ஒன்று, வரிசையாக வாகனங்கள் சென்று கொண்டிருந்ததால் ஓரமாக காத்திருக்கிறது. சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்து, கார் நின்ற பிறகு, அது பொறுமையாக சாலையை கடந்து செல்கிறது.
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள காவல் துறையினர், பொதுமக்களும் இதேபோல போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கின்றனர்.
காவல் துறை ஷேர் செய்துள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் காவல் துறையினரின் புதுமையான முயற்சியை பாராட்டி வருகின்றனர்.
நெட்டிசன் ஒருவர் வெளியிட்டுள்ள கமெண்டில், ” 5 அறிவு கொண்ட மான் கூட போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்கிறது.
நாம் 6 அறிவு கொண்ட மனிதர்கள். நம்மால் ஏன் இதை பின்பற்ற முடியாது? தயவு செய்து அனைவரும், அனைத்து சமயத்திலும் சாலைப் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வீடியோவை பகிர்ந்த அட்மின் யார் என்று தெரியவில்லை, இருப்பினும் அவர் பாராட்டுக்கு உரிய நபர் என்று மற்றொரு பயனாளர் கமெண்ட் செய்துள்ளார்.
பொதுவான போக்குவரத்து விதிகள்
சாலையில் பாதுகாப்பை உறுதி செய்ய சில பொதுவான விதிமுறைகளை நாம் கடைபிடிப்பது அவசியம்.
மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக் கூடாது.
கார்களில் பயணம் செய்யும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும்.
இரு சக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே செல்ல வேண்டும். வாகனத்தில் செல்லும் இருவருமே கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து கொள்ள வேண்டும்.
வாகனம் ஓட்டும்போது மொபைல் ஃபோன் பயன்படுத்தக் கூடாது.
அதிக வேகத்தில் வாகனங்களை இயக்கக் கூடாது.
சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் சமயங்களில் காத்திருக்க வேண்டும். பச்சை விளக்கு எரிந்த பிறகே வாகனத்தை இயக்க வேண்டும்.
‘Deer Zindagi’
— UP POLICE (@Uppolice) May 18, 2022
Life is precious, violation of traffic rules can prove to be dear!
Follow #RoadSafety norms!
जीवन अनमोल है। ट्रैफ़िक नियमों का उल्लंघन आपके लिए घातक हो सकता है।
सड़क सुरक्षा के नियमों का पालन करें। pic.twitter.com/7apVkae30y