- 2026

டெல்லியில் மோசமான வானிலை.. விமானங்கள் ரத்து..

சற்றுமுன்

மோசமான வானிலை காரணமாக சென்னை-டெல்லி இடையே இன்று நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பல விமானங்கள் தாமதமாகியுள்ளன.

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று அதிகாலை கனமழை பெய்தது. தொடர்ந்து, டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. வரை வேகத்துடன் பலத்த காற்று வீசி வருகிறது.மோசமான வானிலை காரணமாக இன்று அதிகாலை முதலே டெல்லிக்கு செல்லவிருந்த விமானங்கள் வேறு மாநிலங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. தில்லியிலிருந்து விமானங்கள் புறப்படுவதிலும் சிக்கல் நீட்டித்து வருகின்றது.

இந்நிலையில், சென்னை – டெல்லி இடையே 4 விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து இன்று மாலை 3.10, 5.15க்கு புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டெல்லியிருந்து மாலை 4, நள்ளிரவு 12.15க்கு வரவிருந்த விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.மேலும், டெல்லியிலிருந்து சென்னை வரும் 5 விமானங்களும், சென்னையிலிருந்து டெல்லி செல்லும் 6 விமானங்களும் தாமதமாக இயக்கப்பட்டு வருவதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

- 2026
9601a8e609ece378ec193f3cbde03564 original - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.