அப்பாச்சிதீர்வு: மாதவிடாய், பேன், மசக்கை வாந்தி, வெட்டை நோய், மேகநோய்..!

Published:

health tips - 2026

பேன்தொல்லை

தலைப்பேன்கள் ஒழிய பின் கண்டவாறு செய்யவேண்டும். ஒருரூபாய் எடை அளவுக்கு படிகாரத்தை எடுத்துக்கொண்டு அதை தூளாக்கிக்கொள்ளவேண்டும். ஒரு பாத்திரத்தில் அந்தத்தூளைப்போட்டு
அதனுடன் நல்லெண்ணையை சேர்த்துக்குழப்பி தலையில் தடவிவிட வேண்டும். பின்பு நான்கு மணிநேரம் கழித்து தலைமுழுகிட வேண்டும். இதை காலை 10 மணியளவில் செய்வது நல்லது. இவ்வாறு வாரம் மூன்றுமுறை தொடர்ந்துசெய்துவந்தால் தலையிலுள்ள பேன்கள் அனைத்தும் அழிந்து ஒழியும்.

கர்ப்பிணி வாந்தி

புதினாக் கீரையைப் புளிவிட்டு அரைத்து அதை உணவோடு பிசைந்து உண்டுவர குமட்டல், வாந்தி குணமாகும்.

அதிகமான மாதவிடாய்

பெண்களுக்கு மாதவிடாய் அதிகமாகப் போனால் அரசமரத்துப்பட்டையை
பசுவின் பாலில் அரைத்து, இரண்டு, மூன்று முறை கொடுத்திட மாதவிடாய்
உடன் நிற்கும்.

மாதவிடாய் வயிற்றுவலி

புதினாக்கீரையை சட்டினியாகவோ அல்லது துவையல் செய்தோ அல்லது புதினாக்கீரையை இடித்துச்சாறு பிழிந்து 1 டம்ளர் ரசத்தையோ குடிக்கவேண்டும். இதைத் தினமும் மூன்றுவேளைக்கு மூன்றுநாட்களுக்கு குடித்திட மாதவிடாயால் உண்டாகும் தாங்கமுடியாத வயிற்றுவலி குணமாகும்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

வெட்டைநோய்

செம்பருத்திப்பூவை காலையில் மூன்றுவீதம் பத்து தினங்கள் தொடர்ந்து உண்டுவந்தால் ஆண், பெண் இருவரையும் பீடித்த வெட்டைநோய் அகலும்.

மாதவிடாய் ரத்தப்போக்கு

வாழைப்பூவை இடித்துச்சாறு பிழிந்து பனங்கற்கண்டைக் கலந்து அருந்திவந்தால் பெண்களுக்கு மாதவிடாயின்போது இரத்தம் அதிகமாகப் போவது நின்றுவிடும். சிறுநீர் கடுப்பு, சிறுநீர்ப்பையில் தோன்றும் கல், உடம்பில் காணும் உப்புச்சத்து முதலியவை அகலும். ஆனால் வாழைப்பூ சாறைதொடர்ந்து காலை, மாலை என இருவேளை 1 டம்ளர் வீதம் அருந்திவரவேண்டும்.

மேகநோய், வெள்ளை, வெட்டை

தினமும் 1/4படி வீதம் வெள்ளாட்டுப்பாலை 48 நாட்களுக்கு அருந்திவர மேகநோய்கள், வெள்ளை வெட்டை மற்றும் நீரிழிவு நோய் அகலும்.

Related articles

Recent articles

spot_img