images 71 1 - 2026

நீட் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் திருத்த வாய்ப்பு..

சற்றுமுன்

நீட் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் தங்கள் விவரங்களை திருத்த, மே27இரவு 9மணி வரை விண்ணப்பதாரர்களுக்கு தேசிய தேர்வு முகமை வாய்ப்பு வழங்கி உள்ளது.

இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை சார்பில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு யு.ஜி-2022 நடத்தப்படுகிறது.

நாடு முழுவதும் வருகிற ஜூலை 17-ம் தேதி நடைபெறவுள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கு neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் செயல்முறை கடந்த ஏப்ரல் 6-ம் தேதி முதல் தொடங்கியது. மேலும் அனைத்து விண்ணப்பதாரர்களும், உரிய கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் கடந்த 6-ந்தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் கடந்த வாரம் 15-ந் தேதி வரை நீடித்து உத்தரவிட்டது. மேலும் மே 20-ந்தேதி விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கியது.

கடைசி நாளான 20-ந்தேதி அன்று நாடு முழுவதிலும் ஏராளமானோர் விண்ணப்பித்தனர். குறிப்பாக தமிழகத்தில் திரளான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர்.

இந்த நிலையில், ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் தங்கள் விவரங்களை திருத்த, விண்ணப்பதாரர்களுக்கு தேசிய தேர்வு முகமை வாய்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்களை நாளை மறுநாள் வரை மே24 முதல் 27-ந்தேதி இரவு 9 மணி வரை திருத்தங்களைச் செய்ய விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அதன்பிறகு, விவரங்களில் எந்தத் திருத்தமும் செய்ய முடியாது.

எனவே திருத்தம் செய்வதற்கு மேலும் வாய்ப்பு வழங்கப்படாது என்பதால், திருத்தத்தை மிகவும் கவனமாக செய்ய வேண்டும் என விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

images 71 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.