அப்பப்பா.. இன்னும் எத்தனை ஆப் தான்..? இந்த மூன்றையும் உடனே டெலிட் பண்ணுங்க..!

china apps - 2026

கூகுள் பிளே ஸ்டோரில் அதிகமான செயலிகள் (apps) இருந்தாலும், அவற்றை கவனமாக பயன்படுத்துவது மிகவும் அவசியம்.

குறிப்பாக சில செயலிகளின் பாதுகாப்பு அம்சங்களை பற்றி கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த விபரங்கள் போன்றவற்றிக்கு பாதுகாப்பு இருக்காது.

இந்நிலையில் கூகுள் பிளே ஸ்டோரில் பிரபலமான மூன்று செயலிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஸ்டைல் மெசேஜ் (Style Message),
பிளட் பிரஷர் ஆப் (Blood Pressure App), கேமரா பிடிஎப் ஸ்கேனர் (Camera PDF Scanner)

இந்த மூன்று செயலிகள் தான் தற்போது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

இந்த 3 செயலிகளும் வங்கி சார்ந்த தகல்களை திருடும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த மூன்று செயலிகள் ஜோக்கர் என்ற மால்வேரை உங்கள் ஸ்மார்ட்போனுக்குள் அனுமதிக்கிறதாம்.

ஜோக்கர் மால்வேர் என்பது வாடிக்கையாளர்களின் நிதி சார்ந்த தகவல்களை திருடக்கூடியது. அதேபோல் இந்த செயலிகள் ஆண்ட்ராய்டு பயனர்களிடம் ஒப்புதலின்றி விலையுயர்ந்த சந்தா சேவைகளுக்குப் பதிவு செய்து, அவர்களிடமிருந்து பணத்தைத் திருடுகின்றன எனவும் தகவல் வெளிவந்துள்ளது.

Kaspersky சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தான் இந்த மூன்று செயலிகளில் பிரச்சனை இருப்பதை கண்டுபிடித்தது. இதை தொடர்ந்து பிளே ஸ்டோரில் இருந்து கேமரா பிடிஎப் ஸ்கேனர், பிளட் பிரஷர் ஆப், ஸ்டைல் மெசேஜ் செயலிகள் நீக்கம் செய்யப்பட்டன.

ஒருவேளை நீங்கள் இந்த செயலிகளை உங்கள் போனில் இன்ஸ்டால் செய்திருந்தால் உடனே டெலிட் செய்யவும். அதேபோல் ட்ரெண்ட் மைக்ரோ சைபர் செக்யூரிட்டி நிறுவனம் கடந்த வாரம் 7 ஆபத்தான ஆப்ஸ்களை கண்டறிந்தது.

குறிப்பாக இந்த 7 ஆப்ஸ்கள் Facebook கடவுச்சொல் மற்றும் கிரிப்டோ தரவையும் திருடுவதாக ட்ரெண்ட் மைக்ரோ சைபர் செக்யூரிட்டி நிறுவனம் அறிக்கை வெளிப்படுத்துகிறது.

எனவே இந்த 7 ஆப் வசதிகளை நீங்கள் பதிவிறக்கம் செய்திருந்தால் உடனே டெலிட் செய்யும்படி ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீங்கள் டெலிட் செய்ய வேண்டிய அந்த 7 ஆப்ஸ்கள் இதோ.

டெய்லி ஃபிட்னெஸ் OL ஆப் (Daily Fitness OL)

பெயர் குறிப்பிடுவது போல, இது யுடிலிட்டிஸ் & டூல்ஸ் பிரிவில் வரும் ஃபிட்னஸ் ஆப்ஸ். அதாவது பிட்னெஸ் ஆப்ஸ்கள் தற்போது மிகவும் பிரபலம். ஆனால் இந்த டெய்லி ஃபிட்னெஸ் OL ஆப் வசதியானது பயனர்களின் டேட்டாவை திருடுவதாக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பனோரமா கேமரா (Panorama Camera)

உங்கள் ஃபோனின் கேமரா மூலம் பனோரமா படங்களை எடுப்பதற்கான ஆப்ஸ் தான் இது. இந்த ஆப் வசதியும் பயனர்களின் தரவுகளை திருடுவதாக தெரியவந்துள்ளது. எனவே பயனர்கள் இந்த ஆப் வசதியை பயன்படுத்தி வந்தால் உடனே ஸ்மார்ட்போனில் இருந்து நீக்கும்படி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிசினஸ் மெட்டா மேனேஜர் (Business Meta Manager)

அதாவது பேஸ்புக் தளத்தில் சேவை வழங்கும் தோற்றத்தில் உள்ளது பிசினஸ் மெட்டா மேனேஜர் ஆப். குறிப்பாக இந்த ஆப் வசதியும் மால்வேர்களைக் கொண்டுள்ளது. இதை பதிவிறக்கம் செய்திருந்தால் உடனே டெலிட் செய்யவும்

ஸ்வார்ம் போட்டோ (Swarm Photo)

போட்டோ ஷேரிங் மற்றும் எடிட்டிங் போன்றவைகளுக்குப் பயன்படும் இந்த ஸ்வார்ம் போட்டோ ஆப் ஆனது உங்களின் தனியுரிமைத் தகவல்களை திருடும். எனவே இந்த ஆப் வசதியை நீங்கள் இன்ஸ்டால் செய்திருந்தால் உடனே டெலிட் செய்யவும்.

என்ஜாய் போட்டோ எடிட்டர் (Enjoy Photo Editor)

பெயர் குறிப்பிடுவது போல, இது புகைப்படம் எடிட் செய்ய பயன்படும் ஒரு ஆப் வசதியாகும். மேலும் ட்ரெண்ட் மைக்ரோ அறிக்கை ஆனது இந்த ஆப் வசதியில் சில பிழைகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இதை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

கிரிப்டோமைனிங் ஃபார்ம் யுவர் ஓன் காயின் (Cryptomining Farm Your own Coin)

உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சி மைனிங் வாயிலாகவும் நிறைய ஹேக்கர்கள் பயனர்களின் தரவுகளை திருடுகின்றனர்.

மேலும் இந்த கிரிப்டோமைனிங் ஃபார்ம் யுவர் ஓன் காயின் ஆப் வசதி மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகிறது. எனவே இதை நீங்கள் பயன்படுத்தி வந்தால் உடனே டெலிட் செய்யவும்.

போட்டோ கேமிங் பசில் (Photo Gaming Puzzle)

கேமிங் தளமாக இருக்கும் இந்த போட்டோ கேமிங் பசில் ஆப்-இல் பிழை இருப்பது தெரியவந்துள்ளது. ஒருவேளை நீங்கள் இந்த ஆப் வசதியை இன்ஸ்டால் செய்திருந்தால் உடனே டெலிட் செய்யவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories