Homeவிளையாட்டுIPL 2022: லக் இல்லையே லக்னோவுக்கு..!

IPL 2022: லக் இல்லையே லக்னோவுக்கு..!

இனி அடுத்த போட்டி அகமதாபாத்தில் நடைபெறும். ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் மே 27ஆம் தேதி அடுத்த க்வாலிஃபையர் போட்டியில் விளையாடுகின்றன.

ipl 2022 - Dhinasari Tamil

ஐ.பி.எல் 2022 – 25, மே, 2022 – லக்னோ vs பெங்களூரு
– K.V. பாலசுப்பிரமணியன் –

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி (207/4, படிதார் 112*, கார்த்திக் 37*) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை (193/6, ராகுல் 79, ஹூடா 45, ஹேசில்வுட் 3-43) 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அதிர்ஷ்டத்தை நம்புவதற்கு மேலும் ஒரு வெற்றி அதற்கு ஒரு காரணமாக நேற்று அமைந்துவிட்டது.

இந்த ஆண்டு, லுவ்னித் சிசோடியாவின் காயம் காரணமாக சீசனின் நடுப்பகுதியில் விளையாட வந்த ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ரஜத் படிதார், 54 பந்தில் ஆட்டமிழக்காமல் 112 ரன்களை குவித்து அணியை இரண்டாவது தகுதிச் சுற்றிற்கு அனுப்பினார். படிதாரின் இன்னிங்ஸில் அதிர்ஷ்டம் விளையாடியது. ஆனால் அவர் 16ஆவது ஓவரில் ஆட்டமிழக்க வேண்டியது.

அதன் பின்னர் அவர் 14 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். 6.5 ஓவர்களில் கார்த்திக்குடன் 92 ரன்களை சேர்த்ததற்கு முன், தினேஷ் கார்த்திக்கும் (37 ரன்), ஒரு எல்பிடபிள்யூ மற்றும் ஒரு ட்ராப் கேட்ச் இரண்டில் இருந்தும் தப்பித்தார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அந்த கைவிட்டுப்போன கேட்சுகளை எண்ணி மனம் புழுங்கியிருக்கும். ஏனெனில் அவர்கள் இறுதியில் பெங்களூருவின் ஸ்கோரை நெருங்கி வந்தனர். ஏறக்குறைய இன்னிங்ஸ் முழுவதும் அவர்களின் ரன்ரேட் ராயல் சேலஞ்சர்ஸை விட அதிகமாக இருந்தது, ஆனால் கடைசி ஐந்து ஓவர்களில் 84 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு மிகவும் கடினமான ஒன்றாகும்.

கேப்டன் கே.எல். ராகுலின் இன்னிங்ஸ் இதற்கு ஒரு முக்கிய காரணம். ஏழு ஓவர்களில் 99 ரன்களை அடிக்கவேண்டும் என்ற நிலை வரை அவர் மெதுவாக ஆடிகொண்டிருந்தார். மேலும் அவர் 42 பந்துகளில் 48 ரன்கள் அடித்த அவருக்கு 58 பந்துகளில் 79 ரன்கள் அடிக்க இயலவில்லை.

பேட்டர்களின் தடாலடி ஆட்டத்தின் நடுவே சூப்பர் ஜெயண்ட்ஸின் மொஹ்சின் கான் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸின் ஹர்ஷல் படேல் 4-0-25-1 என்ற ஒரே மாதிரியான ஓவர்களை வீசினர் என்பது குறிப்பிடத்தக்கது. கோஹ்லி ஒரு நீண்ட இன்னிங்ஸுக்கு தன்னைத்தானே தகவமைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பவர்பிளேயின் கடைசி இரண்டு ஓவர்களை படிதார் ரிஸ்க் எடுத்து விளையாடினார்.

ரவி பிஷ்னோய் பின்னர் ரன்ரேட்டை மெதுவாக்கினார், கோஹ்லி ஒரு பந்துக்கு ஒரு ரன் என ஆடி 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 8.3 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 70 ரன்கள் எடுத்திருந்தபோது, ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரன்ரேட்டை இன்னும் உயர்த்த வேண்டும் என எண்ணியது.

குயின்டன் டி காக் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். ராகுலும் (79 ரன்) மனன் வோஹ்ராவும் (19 ரன்) பவர்பிளேயின் கடைசி இரண்டு ஓவர்களை நன்றாக ஆடினர். ஹேசில்வுட் வோஹ்ராவை அவுட் செய்தாலும், ராகுல் 6ஆவது ஓவரில் சிராஜ் பந்தில் இரண்டு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து பவர்பிளேயில் 62 ரன்கள் எடுத்தார்.

15ஆவது ஊவரில் ஹசரங்காவை இரண்டு சிக்சர்கள் அடித்த தீபக் ஹூடா (45 ரன்) அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ராகுல் 57 ரன்; அனி 137/3. ஸ்டொயினிஸும் (9 ரன்) நிலைக்கவில்லை.

கடைசி இரண்டு ஓவர்களில் 33 ரன்கள் எடுக்கவேண்டியிருந்தது. 19ஆவது ஓவரில் ஹேசல்வுட் மூன்று வைட், ஒரு நோபால் வீசினார்; இருப்பினும் ராகுல், க்ருணால் பாண்ட்யா ஆகியோரின் விக்கட்டுகளை எடுத்தார்.

கடைசி ஓவரில் ஆறு பந்துகளில் 24 ரன் எடுத்தால் வெற்றி. ஹர்ஷல் படேல் மிக அருமையாக அந்த ஓவரை வீசினார். லக்னோ அணியால் 9 ரன் கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே பெங்களூரு அணி வெற்றிபெற்றது.

இனி அடுத்த போட்டி அகமதாபாத்தில் நடைபெறும். ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் மே 27ஆம் தேதி அடுத்த க்வாலிஃபையர் போட்டியில் விளையாடுகின்றன.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,145FansLike
375FollowersFollow
65FollowersFollow
74FollowersFollow
2,719FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

ரூ. 300 கோடி வரை வசூல் செய்துள்ள்ள விக்ரம்.. நன்றி தெரிவித்த கமல்..

உலகம் முழுவதும் விக்ரம் ரூ. 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....

பிரபலமாகி வரும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் ..

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பிரபலமாகி வருகிறது. நடிகர், பாடலாசிரியர், இயக்குனர்...

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு சொகுசு காரைப் பரிசளித்த கமல் ..

விக்ரம் படம் வெற்றியடைந்ததையடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு சொகுசு காரைப் பரிசளித்து கௌரவ படுத்தினார்...

தாத்தா வசனத்தை தாத்தாவிடமே நடித்துக் காட்டும் பேத்தி!

தனது தாத்தா முன்பு அவருடைய காமெடி வசனத்தை பேசி நடித்து அசத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest News : Read Now...